அவைதாம், சுடர்வீ வேங்கை, தசும்பு துளங்கிருக்கை, ஏறாவேணி, நோய்தபு நோன்றொடை, ஊன்றுவை யடிசில், கரைவாய்ப் பருதி, நன்னுதல் விறலியர், பேரெழில் வாழ்க்கை, செங்கை மறவர், வெருவருபுனற்றார். இவை பாட்டின் பதிகம். பாடிப் பெற்ற பரிசில் : உம்பற்காட்டு வாரியையும் தன் மகன் குட்டுவன் சேரலையும் கொடுத்தான் அக் கோ. கடல்பிறக் கோட்டிய செங்குட்வன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான். 1. சுடர்வீ வேங்கை |