காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடினர் பத்துப்பாட்டு. அவைதாம், வடுவடு நுண்ணயிர், சிறுசெங்குவளை, குண்டுகண் ணகழி, நில்லாத தானை, துஞ்சும் பந்தர், வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி, சில்வளை விறலி, ஏவிளங்கு தடக்கை, மாகூர் திங்கள், மரம்படு தீங்கனி ; இவை பாட்டின் பதிகம். பாடிப் பெற்ற பரிசில் : ‘கல னணிக’ என்று அவர்க்கு ஒன்பது காப்பொன்னும் நூறாயிரங் காணமும் கொடுத்துத் தன் பக்கத்துக் கொண்டான் அக் கோ. ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான். |