பக்கம் எண் :

295

மெண்ணாமைக்கும்   முன்  சமத்து எழுதருதற்கும் ஏது  இஃதென்பார்
“வன்கண் ஆடவர்” என்று சிறப்பித்தார். தெவ்வரொடு பொருமிடத்துத்
தும்பை  சூடிப்  பொருது  வெல்வது  தோன்ற, “தொலையாத் தும்பை
தெவ்வழி  விளங்கி”  யென்றார்.  தோலாமையை விளக்கும் தும்பைப்
போர்  என்றற்கு, “தொலையாத் தும்பை” எனல் வேண்டிற்று. விளங்க
என்புழிக்  காரணம்  காரியமாக  உபசரிக்கப்பட்டது.  தெவ்வரிடையே
பட்டவர்  பலராயினும்,  அவரனை  வரும் துறக்க வின்பம்  பெற்றனர்
என்பார், “உயர்நிலை யுலக மெய்தினர் பலர்பட” என்றார். உயர்நிலை
யுலகம்,  துறக்கம்  ;  “உயர்நிலை  யுலகத்துச்  செல்லாது” (பதிற். 54)
எனப்  பிறாண்டும்  கூறுதல்  காண்க.  தெவ்வழிப் பலர்பட வெனவே,
தன்  படையில்  பட்டவர்  இலர்  என்பதாம். இருப்பின் அவர் மிகச்
சிலரே.     தெவ்வழியிற்     பலர்படக்     கொன்று      வெனிற்
யெய்தியதனோடமையாது  அப் பலர்க்கும் உயர்நிலை யுலகம் வழங்கி
இன்புறுத்துதல் பற்றி, சேரலாதன் செய்த போரை, “நல்லமர்” என்றும்,
அதனை   யறத்தாற்றிற்  பொருது  கடக்கும்  அவன்   வன்மையைச்
“செல்லுறழ்  தடக்கை”  எனக் கைம்மேல் வைத்தும் கூறினார், செல்-
இடி  ;  “செறுநர்த்  தேய்த்த  செல்லுறழ்  தடக்கை” (முருகு. 5) என
நக்கீரரும் கூறுதல் காண்க.
  

இவ்வாறு  போருடற்று முகத்தால் தனக்கழிந்து உயிர் துறந்தார்க்கு
உயர்   நிலையுலகமும்,   தன்னரு   ணோக்கம்   பெற்று  இரக்கும்
இரவலர்க்குப்  பெரும்  பொருளும் வழங்கும் சேரலாதனது கைகளின்
சிறப்பைத்    “தடக்கை”    என்று    குறித்தாராயிற்று.  சேரலாதன்
இரவலர்க்குக்  கொடை  வழங்கு மாற்றால் அத் தடக்கையைக் கவிப்ப
துண்டே  யன்றிப்  பிறரை  இரந்தறியான். என்றற்கு “இரப்போர்க்குக்
கவிதலல்லதை   இரைஇய  மலர்  பறியா”  என்றார்.  இதனை  யாம்
கண்ணிற்  கண்டே  மில்லையாயினும்  பிறர் பொய்யாகவேனும் கூறக்
கேட்டிலோம்  என்றற்கு,  “இரைஇய  மலர் பறியாவெனக் கேட்டிகும்”
என்றார். பிறரைப் பொருள் வேண்டி யிரவானாயினும் துணை வேண்டி
யானும் குறை யிரந்தறியா னென்பதும் “இரைஇய” எனப் பொதுப்படக்
கூறியதனால்   பெற்றாம்.   இன்ன   இயல்புடையான்பால்  இவ்வாறு
கூறலாகா  தாயினும்,  தன்னை  “எறிய  ரோக்கிய  சிறு செங்குவளை
ஈயென”த்  தன்  காதலிபால் அவன் ஊடலுணர்த்துமாற்றால் இரப்பது
கூறுகின்றாராதலின்,  அக்கருத்தினை  முடித்தற்கு  உபகாரப்படுவதால்
இவ்வாறு கூற லமையுமாறு உணர்க.
  

13 - 24. இனியே .......................கையதை.

உரை: இனி   -  இப்பொழுது  ;   சுடரும்  பாண்டில்  திருநாறு
விளக்கத்து - ஒளிர்கின்ற கால் விளக்கின் திரு விளங்கும் ஒளியிலே ;
முழா  இமிழ்  துணங்கைக்கு  -  முழவு  முழங்க ஆடும் துணங்கைக்
கூத்தின்  கண்  கை  பிணைந்தாடும்  மகளிர்க்கு ;தழூஉப் புணையாக
கைகோத்துக்    கொள்ளும்   புணையாக;   சிலைப்பு   வல்லேற்றின்
சிலைத்தலையுடைய  வலிய  ஏற்றினைப்  போல ; தலைக்கை - தந்து
முதற்கை   கொடுத்து   ;  நீ  நளிந்தனை  வருதல்  -  நீ  செறிந்து
வந்தமையின் பொருட்டு ; உயவுங் கோதை - அசைகின்ற மாலையும்,