தகுவன வழங்குவது வள்ளியோரது செயலாதலால், யான் கருதியது தேர்ந்து அதனை முடித்துத் தருக என்பார், “உள்ளியது முடித்தி” என்றும் கூறினார் . பழையவுரைகாரரும், “வள்ளிய னென்பதற்கு வள்ளியை யென்றது இடவழுவமைதி” யென்றும், உள்ளியது முடித்தி யென்றது, “யான் நினைத்து வந்த காரியத்தை முடி யென்றவா” றென்றும், “முடித்தி யென்றது முன்னிலை யேவல் வினை” யென்றும் கூறுவர் . பதிகம் கூறுவதுபோல, சேரமான் பக்கத்துத் தம்மைக் கொள்ளல் வேண்டு மென்பது ஈண்டு முன்னிய கருத்து என்பதும் ஒன்று. இனி, உள்ளியது முடித்தி யென்பதற்கு, கருதிய கருத்தைக் கருதியவாறே முடிக்கின்றா யென்றும், அத்தகைய வினைத்திட்பமும் தூய்மையு முடைய நீ, நீடு வாழ்க என்பார், “வாழ்க நின் கண்ணி” என்றாரென்றும் உரைத்தலு மொன்று. 3 - 9. வீங்கிறை..................................மாறே. உரை : வீங்கு இறை - அகன்ற சந்து பொருந்திய வளை யணி்ந்த ; தடைஇய - பெருத்த ; அமை மருள் பணைத் தோள் - மூங்கில் போலும் பருத்த தோளையும் ; மழைக்கண் - குளிர்ந்த கண்களையும் ; ஏந்து எழில் - உயர்ந்தெழுதலையும் ; வனைந்து வரல் இள முலை - தொய்யில் எழுதப் பட்டு வருதலுமுடைய இள முலையினையும் ; பூந் துகில் அல்குல் - பூத்தொழில் செய்யப்பட்ட உடையணிந்த அல்குலையும் ; தேம்பாய் கூந்தல் - வண்டு பாய்ந்தொலிக்கும் கூந்தலையும் ; மின் இழை விறலியர் மின்னுகின்ற இழையினையுமுடைய விறலியர் ; நின் மறம் பாட - நின்னுடைய போர் வீரத்தைப் புகழ்ந்து பாட ; இரவலர் புன்கண் தீர - அவ்விறலியர்க்கே யன்றி, இரப்பவர் வறுமை கெடுதற்கும் ; உரை சால் நன் கலம் - புகழமைந்த நல்ல அணிகலன்களை ; நாடொறும் வரைவில வீசி - நாள்தோறும் வரையாது வழங்கி ; அனைய ஆகல் மாறு - அத்தன்மையையுடைய னாதலாலே எ - று. இறை, ஆகுபெயரால் வளைக்காயிற்று . இறையை மூங்கிற்கே ஏற்றுவாரு முளர். தடைஇய, தடவென்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சக்குறிப்பு. தடைஇய அமை என்றதற்கேற்பப் பணைத்தோள் என்றார். ஏந்தெழில் இளமுலை, வனைந்து வரலிளமுலை யென இயையும். வனைதல், தொய்யி லெழுதுதல். “நற்றோ ளிழைத்த கரும்புக்கு நீ கூறு” (கலி. 64) என்றும், “தொய்யில் சூழ் இளமுலை” (கலி. 125) என்றும் வருதல் காண்க. எச்சவும்மை தொக்கது. இனிப் பழையவுரைகாரர், “தடைஇய அமை, பருத்த மூங்கி” லென்றும், “நின் மறம் பாட வீசி யெனக் கூட்டி, நின் மறம் பாடா நிற்க, அதனைக் கேட்டிருந்து வீசி யென வுரைக்க” என்றும், “வீசியென்னும் எச்சத்தினை ஆக லென்னும் தொழிற்பெயரொடு முடிக்க” என்றும், “அனையை யாகன்மாறே யென்றது, அவ் வீசுதற்கு ஏற்ற அத்தன்மையை யுடையை யாகையா னென்றவா” றென்றும், “மாறென்பது ஆனென்னும் உருபின் பொருள் |