பக்கம் எண் :

324

நச். மேற்)  என்று  சான்றோர் இவ்வாறு வஞ்சினம் கூறுமாறு காண்க.
இனிக்   குவளையரும்   யாக்கை  யருமாய்,  செல்லுறழ்  மறவராகிய
பகைவரைக்  கொல்லும்  படை  தருவாராய்க் கூறிக் கண்ணிய வயவர்
என்றுரைப்பினுமாம்.  பழையவுரைகாரர்,  யாக்கையராகிய மறவர் என
இருபெயரொட்டு  என்பர்.  அன்றியும், குவளையராய், யாக்கையராகிய
மறவரைக்    கொல்படை  தருவாராய்  என  இயைத்தலு   மொன்று.
வெண்தோட்டசைத்த      வொண்பூங்      குவளை      யென்றது
அடையாளமாலை.   கண்ணி,   போர்க்கண்ணி,  கண்ணி  கண்ணுதல்,
தாங்கள் சூடிய போர்க்கண்ணிக் கேற்ப வினைசெயக் கருதுத லென்பது
பழையவுரை .

9 - 12. பொய்படுபு .......................... என்ப .

உரை : பொய் படுபு அறியா வயங்கு செந் நாவின் - தாம் கூறும்
சொற்கள்  பொய்யாதலை  யென்றும் அறியாமையால் விளக்கமமைந்த
செவ்விய  நாவினையும் ; எயில் எறி வல் வில் ஏ விளங்கு தடக்கை -
பகைவர்   மதில்களை   யெறியும்  வலிய  வில்லும்  அம்பும்  ஏந்தி
விளங்கும்  பெரிய  கையினையும்  ; ஏந்தெழில் ஆகத்துச் சான்றோர்
மெய்ம்மறை   -  உயர்ந்த  அழகிய  மார்பினையுமுடைய  வீரராகிய
சான்றோர்க்கு மெய்புகு கருவி போன்றவன் என்றும் ; வான வரம்பன்
என்ப - வான வரம்பனாகிய சேரலாத னென்றும் அறிந்தோர் கூறுவர்
எ - று.

காலமும்     இடமும் செய்யும் வினையும் சீர்தூக்கித் தாம் கூறும்
சொற்கள்  தம்  பயனைப்  பயத்தலின் சிறிதும் தவறுவ தின்மையின்,
“பொய்  படுபு  அறியா” என்றும், பொய்யாமையே நாவிற்குச் சிறப்பும்
செம்மையுமாதலால்   “வயங்கு   செந்நாவி”   னென்றும்,  கூறினார்.
எயிலெறிவல்   வில்   என்பதற்கு  விற்படை  யென்றும், “ஏவிளங்கு
தடக்கை  யென்றது, எத் தொழிலுக்குள்ள கூறுபாடெல்லாம் விளங்கிய
தடக்கை  யென்றவா”  றென்றும், “இச் சிறப்பானே இதற்கு ஏவிளங்கு
தடக்கை யென்று பெயராயிற்” றென்றும் பழையவுரை கூறுகிறது. வான
வரம்ப  னென்ப என்றார் . சான்றோர், சேரர்கட்குப் பொதுவாயமைந்த
இப் பெயர் தனக்குச் சிறப்பாக விளங்குமாறு இச் சேரமான் தன் திறல்
விளங்கு செயலைச் செய்தானென்பது தோன்ற, இப் பத்தின் பதிகமும்
“வான வரம்பனெனப் பேரினிது விளக்கி” யென்பது காண்க.

நாடு  கிழவன், வயவர்  பெருமகன்  என்றும்,  சான்றோர் மெய்ம்
மறை யென்றும் வானவரம்பனென்றும் கூறுப என இயைக்க.

1. ஆடுக ......................பரிசிலர்.

உரை : விறலியர்-விறலியர்களே ; ஆடுக - நீவிர் ஆடுவீர்களாக ;
பரிசிலர்  பாடுக - பாணரும் பொருநருமாகிய பரிசில் மாக்களே, நீவிர்
பாடுவீர்களாக எ - று.

சேரலாதனைக்     காணப்  போந்து  அவன்  திருமுன்  நிற்கும்
விறலியரும்     பாணரும்     பொருநருமாகிய     பரிசிலர்களுக்கு
ஆடுகோட்பாட்டுச்  சேரலாதன் இயல்பினை இதுகாறும் கூறியவாற்றாற்
கூறிக் காட்டினாராதலின், கண்ட