பக்கம் எண் :

334

ஆசிரியர் கபிலர் பாடிய

ஏழாம் பத்து

பதிகம்
 

மடியா வுள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடுநுண் கேள்வி யந்துவற் கொருதந்தை
ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி யீன்றமகன்
நாடுபதி படுத்து நண்ணா ரோட்டி
 
5வெருவரு தானைகொடு செருப்பல கடந்து
ஏத்தல் சான்ற விடனுடை வேள்வி
ஆக்கிய பொழுதி னறத்துறை போகி
மாய வண்ணனை மனனுறப் பெற்றவர்
கோத்திர நெல்லி னொகந்தூ ரீத்துப்
 
10புரோசு மயக்கி
மல்ல லுள்ளமொடு மாசற விளங்கிய
செல்வக் கடுங்கோ வாழி யாதனைக்

 

கபிலர்     பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம், புலாஅம் பாசறை,
வரைபோலிஞ்சி,     அருவி     யாம்பல்,    உரைசால்    வேள்வி,
நாண்மகிழிருக்கை,  புதல்சூழ்  பறவை  ; வெண்போழ்க் கண்ணி, ஏம
வாழ்க்கை,  மண்கெழு  ஞாலம்,  பறைக்குர  லருவி ; இவை பாட்டின்
பதிகம்.

பாடிப்பெற்ற   பரிசில் ; சிறுபுறமென நூறாயிரங் காணங் கொடுத்து
நன்றா  வென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம்
காட்டிக் கொடுத்தான்  அக்  கோ  செல்வக்  கடுங்கோ  வாழியாதன்
இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.