பக்கம் எண் :

337

பலாஅம்     பழுத்த             வென்னும்     பாடத்துக்குப்
பலாப்பழத்தினிடத்தவாகிய வென்று உரை கூறிக்கொள்க.

9 - 10. முழவு .................... படர்ந்தோன்.

உரை :  முழவு மண் புலர - முழவினிடத்தே   பூசிய  மார்ச்சனை
மண்   புலர்ந்   தொழியவும்  ;  இரவலர்  இனைய  -  வேண்டுவன
வழங்குவோர் இல்லாமையால் இரவலர் வருந்தவும் ; வாராச் சேட்புலம்
படர்ந்தோன்   -   மீண்டு   இந்   நிலவுலகிற்கு  வருதல்  இல்லாத
மேலுலகிற்குச் சென்றொழிந்தான் எ - று.

முழவு     முழக்கலுறுவோர் அதன்கண் ஓசை   மிகுமாறு கருமட்
பொடியும்  பசையும்  கலந்து பிசைந்து பூசி, ஈரம் புலராவாறு அவ்வப்
போது  தண்ணீரைத்  தடவுவர். இக் காலத்தும் தண்ணுமை முதலியன
இசைப்  போர்பால்  இச்  செயலுண்மை காணலாம். முழவு முதலியன
இயக்காதவழி   மண்   புலர்ந்து   இறுதி  முழவிற்கு  இறுதி பயந்து
விடுதலால்,  “முழவு  மண்  புலர” என்றார். எனவே, அம் முழவினை
இயக்குவோர்  இலராயினர்  என்பதாம். “முழவு அழிய என்று கூறதல்
இன்னாததாதலின்  மண்  புலர  எனத்  தகுதிபற்றிக்   கூறப்பட்டது ;
என்றதன்  கருத்து  அதனால் தொழில்கொள்வாரின்மையின் அது பய
னிழந்த  தென்பது” என்பர், உ. வே. சாமிநாதையர். இரவலர் இ்ன்மை
தீர  அவர்  தகுதியும்  குறிப்பும்  அறிந்து  ஆர வழங்குநர் இல்லை
யென்பது  பற்றி,  “இரவலர்  இனைய”  என்றார்.  பிறவா  நிலையும்
அதற்குரிய  மேலுலகும்  பெற்றா  னென்பார்,  “வா  ராச் சேட்புலம்
படர்ந்தோன்”  என்றார்.  “வாரா வுலகம் புகுதல்” (புறம். 341) என்று
பிறரும்  கூறுதல்  காண்க.  “பாலறி  மரபி  னம்மூவீற்றும், ஆ வோ
வாகும்   செய்யுளுள்ளே”  (தொல்  .  வினை  :  14)  என்பதனால்,
படர்ந்தோனென நின்றது. படர்ந்தோ னென்றது வினைமுற்று.

10 - 18. அளிக்கென ......... கலி மகிழானே.

உரை : ஒள்வாள் உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை -  ஒள்ளிய
வாட்   படையையும்   வன்மையுடைய  களிறுகளையுமுடைய  புலால்
நாற்றம்  பொருந்திய பாசறைக்கண்ணே ; நிலவின் அன்ன வெள்வேல்
பாடினி.   நிலவின்   ஒளியைப்போல   வெள்ளொலி  செய்யும்  நின்
வேற்படையைப்   புகழ்ந்து  பாடும்  பாடினி  ;  முழவின்  போக்கிய
வெண்கை   -   முழங்கும்  முழவின்  தாளத்திற்கேற்ப  ஒத்தறுக்கும்
வெறுங்கையை  யசைத்துப்  பாடும்,  விழவின் அன்ன -  விழாக்களம்
போன்ற   ;  நின்  கலி  மகிழான்  -  நின்னுடைய  ஆரவார மிக்க
திருவோலக்கத்தின் கண்ணே ; அளிக்க என இரக்குவாரேன் - எம்மை
இதுகாறும்  புரந்த  வேள்பாரி இறந்தானாதலின் எம்மை அளிப்பாயாக
என்று  இரந்து  வந்தேனில்லை  ;  எஞ்சிக் கூறேன் - நின்  புகழைக்
குன்றவும்  மிகை  படவும்  கூறமாட்டேன்  ;  ஈத்தது   இரங்கான்  -
செல்வக் கடுங்கோ வாழியாதன் ஈதலால் பொருள் செலவாவது குறித்து