பக்கம் எண் :

386

ஆசிரியர் அரிசில்கிழார் பாடிய

எட்டாம் பத்து

பதிகம்

பொய்யில் செல்வக் கடுங்கோ வுக்கு
வேளாவிக் கோமான் பதுமன்றேவி யீன்றமகன்
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப்
பல்வேற் றானை யதிக மானோ
டிருபெரு வேந்தரையு முடனிலை வென்று
முரசுங் குடையுங் கலனுங் கொண்
டுரைசால் சிறப்பி னடுகளம் வேட்டுத்
துகடீர் மகளி ரிரங்கத் துப்பறுத்துத்
தகடூ ரெறிந்து நொச்சிதந் தெய்திய
அருந்திறலொள்ளிசைப் பெருங்சேரலிரும் பொறையை

  

மறுவில்     வாய்மொழி  அரிசில்கிழார்  பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்,  குறுந்தாண்  ஞாயில்,  உருத்தெழு வெள்ளம், நிறந்திகழ்
பாசிழை,  நலம்பெறு  திருமணி,  தீஞ்சேற் றியாணர், மாசித றிருக்கை,
வென்றாடு   துணங்கை   .   பிறழ  நோக்கியவர்,  நிறம்படு  குருதி,
புண்ணுடை யெறுழ்த்தோள் . இவை பாட்டின் பதிகம்.

பாடிப்  பெற்ற பரிசில் : தானும் கோயிலாளும் புறம்போந்து நின்ற
கோயிலுள்ளவெல்லாம்    கொண்மின்    என்று   காணம்   ஒன்பது
நூறாயிரத்தோடு  அரசு கட்டிற்கொடுப்ப, அவர் யான் இரப்ப இதனை
யாள்க என்று அமைச்சுப் பூண்டார்.

தகடூரெறிந்த    பெருஞ்சேர   லிரும்பொறை    பதினேழியாண்டு
வீ்ற்றிருந்தான்.