1. குறுந்தாண் ஞாயில் |
71. | அறாஅ யாண ரகன்கட் செறுவின் அருவி யாம்ப னெய்தலொ டரிந்து செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப் பரூஉப்பக டுதிர்த்த மென்செந் நெல்லின் |
5 | அம்பண வளவை யுறைகுவித் தாங்குக் கடுந்தே றுறுகிளை மொசிந்தன துஞ்சும் செழுங்கூடு கிளைத்த விளந்துணை மகாஅரின் அலந்தனர் பெருமநின் னுடற்றி யோரே ஊரெரி கவர வுருத்தெழுந் துரைஇப் |
10 | போர்சுடு கமழ்புகை மாதிர மறைப்ப மதில்வாய்த், தோன்ற லீயாது தம்பழி யூக்குநர் குண்டுக ணகழிய குறுந்தாண் ஞாயில் ஆரெயிற் றோட்டி வௌவினை யேறொடு கன்றுடை யாயந் தரீஇப் புகல்சிறந்து |
15 | புலவுவில் லிளைய ரங்கை விடுப்ப மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ ஆன்பயம் வாழ்நர் கழுவு டலைமடங்கப் பதிபா ழாக வேறுபுலம் படர்ந்து விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு வற்றென |
20 | அருஞ்சமத் தருநிலை தாங்கிய புகர்நுதல் பெருங்களிற் றியானையொ டருங்கலந் தராஆர் மெய்பனி கூரா வணங்கெனப் பராவலிற் பலிகொண்டு பெயரும் பாசம் போலத் திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் னூழி |
25 | உரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி அறிந்தனை யருளா யாயின் யாரிவ ணெடுந்தகை வாழு மோரே |
துறை : செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம் சொற்சீர் வண்ணமும். தூக்கு : செந்தூக்கு. பெயர் : குறுந்தாண் ஞாயில். |