பக்கம் எண் :

404

இதுவுமது.

பெயர்  : நலம்பெறு திருமணி.

3 - 17. சாயறல் .......... கருவில்.   

உரை : சாய் அறல் கடுக்கும் - நுண்ணிய கருமணலை  யொக்கும் ;
தாழ்  இருங்  கூந்தல்  -  காய்ந்த  கரிய கூந்தலையும் ; கொடுமணம்
பட்ட  வினை  மாண்  அருங்கலம்  - கொடுமணம் என்னும் ஊரிலே
உண்டாகிய அரிய கலன்களையும் ; பந்தர் பயந்த பலர் புகழ்  முத்தம்
-   பந்தர்   என்னும்   ஊரிடத்தே   பெற்ற   பலரும்   புகழ்கின்ற
முத்துக்களையும்  ;  வரை யகம் நண்ணி - பெருமலைகளை யடைந்து
அவற்றிடத்தம் ; குறும்பொறை நாடி - சிறுபெரு மலைகளை  யடைந்து
அவற்றிடத்தும்    தேடி    ;   தெரியுநர்   கொண்ட   -  குற்றமற
ஆராய்ந்துகொள்ளும்  அறிவினை  யுடையோர் கொண்ட ; சிரறுடைப்
பைம்பொறி  -  சிதறிக்  கிடத்தலையுடைய  பசிய  பொறிகளையும்  ;
கவைமரம்  கடுக்கும்  கவலையை  மருப்பின்  - கவைக்கோல்போலக்
கிளைத்தலையுடைய   கொம்பினையும்   ;   புள்ளி   இரலைத்தோல்
புள்ளியினையுமுடைய  மான்  தோலைக் கொண்டு ; ஊன் உதிர்த்து -
அதன்  உட்புறத்துத்  தசையைக்  களைந்து ; தீது களைந்து -  ஏனை
அழுக்குகளையும்  போக்கி  ; எஞ்சிய திகழ் விடு - எஞ்சி நின்ற ஒளி
வீசுகின்ற  ;  பாண்டிற்  பருதி  போகிய  புடை - வட்டமாக அறுத்த
தோளின்  விளிம்பிலே  ;  கிளை  கட்டி  - இனமாகச் சேரக் கட்டி ;
எஃகுடை  இரும்பின்  -  கூர்மையையுடைய  வூசியால்  ; வல்லோன்
தொழில்  வல்லவன்  ;  உள்ளமைத்து  -  உட்புறத்தே  மணிகளைப்
பதித்து  அழகுற  அணி  செய்து  ;  சூடு நிலையுற்று - சூடுதற்குரிய
நிலைமையினை  யுறுவித்து  ;  சுடர்விடு தோற்றம் - ஒளி திகழ்கின்ற
தோற்றத்தைப்  பெறுவித்தலால்  ;  விசும் பாடு மரபின் - விசும்பிலே
பறக்கும்   முறைமையினையுடைய   ;   பருந்து   ஊறு  அளப்ப  -
பருந்தானது ஊனென்று கருதி யதனை யுற்றுக் கவர்தற்கு நினையுமாறு
;  நலம்  பெறு திருமணி - நலம் பெற்ற உயரிய அத்தோற்பணியாகிய
மணியை  ;  கூட்டும்  நற்றோள் - அணிகின்ற நல்ல தோளினையும் ;
ஒடுங் கீ ரோதி - ஒடுங்கிய சுருள் என்னும் பகுதியான கூந்தலையும் ;
ஒண்ணுதல்   -   ஒள்ளிய  நெற்றியினையும்  ;  வேறுபடு  திருவின்
பிறப்பால்   திருமகளின்   வேறுபட்டா   ளென்னும்   சிறப்பெய்திய
மாண்பினையுமுடைய நின் தேவியினுடைய ; நின்வழி வாழியர் - நின்
குடுவழி  நீடு வாழ்வதன் பொருட்டு ; கருவில் - கருவிடத்தேயமைந்து
எ - று.

மென்மையும்   நுண்மையு முடைமைபற்றிக் கருமணலை “சாயறல்”
எனல் வேண்டிற்று. தாழ் இருங் கூந்தல் - முதுகிடத்தே தாழ்ந்த கரிய
கூந்தல் ;