இதனாற் சொல்லிய அவன் கொடைச் சிறப்பொடுபடுத்து வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று. “தெம்முனைப் புலவரைப் பகைவர்கொடி தோன்றல் யாவது என எதிரூன்றுவாரின்மை தோன்றக் கூறிய வதனால் வஞ்சித் துறைப்பாடாணாயிற்று. “முன்னர் ஆறடியும் வஞ்சியடியாய் வந்தமையானே வஞ்சித்தூக்குமாயிற்று”. இருவகைத் தூக்கும் விரவிவந்ததாயினும் ஆசிரிய நடையே பெற்று இனிய ஓசைகொண்டு வருதலின் ஒழுகு வண்ணமாயிற்று ; “ஒழுகு வண்ணம் ஓசையினொழுகும்” (தொல். செய். 224) என்றாராகலின். எட்டாம் பத்து மூலமும் உரையும் முற்றும். |