பெருங்குன்றூர் கிழார் பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம் : நிழல் விடு கட்டி, வினைநவில் யானை, பஃறோற்றொழுதி, தொழினவில் யானை, நாடுகண் நெடுவரை, வெந்திறற் றடக்கை, வெண்டலைச் செம்புனல், கல்கால் கவணை, துவராக் கூந்தல், வலிகெழு தடக்கை. இவை பாட்டின் பதிகம். பாடிப்பெற்ற பரிசில் : மருளில்லார்க்கு மருளக் கொடுக்க வென்று உவகையின் முப்பத்தீராயிம் காணங் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்காகா அருங்கல வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக் காப்பு தான்விட்டான் அக் கோ. குடக் கோ இளஞ்சேர லிரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான். |