பக்கம் எண் :

441

அசைகின்னற     வலியினையுமுடைய பகைவரது ;    செல்   சமம்
தொலைத்த   -   மிக்குச்   சென்று  பொரும்  போர்களை  யழித்த;
வினைநவில் யானை - போர்த் தொழிலிலே நன்கு பயிற்சி பெற்றுள்ள
யானைகள் ; கடாம் வார்ந்து - மதம் பொழிந்து ; கடுஞ்சினம் பொத்தி
- மிக்க சினம் கொண்டு ; வண்டுபடு சென்னிய - மதநீரின் பொருட்டு
வண்டு மொய்க்குந் தலையினையுடைய வாய் ; பிடி புணர்ந்து இயல -
மத வெறி தெளியுமாற்றால் பிடி யானைகளைப் புணர்த்தப் புணர்ந்தும்
தெளியாது  திரிய ; மறவர் மறல - வீரர் போர் விரைய நிகழாமையின்
போர் வெறிகொண்டு திரிய; மா படை உறுப்ப - குதிரைகள் பொருதல்
வேண்டிக்  கலனை  முதலிய படை யணி்யப்பெற்று நிற்ப; தேர் கொடி
நுடங்க  - தேர்கள் பண்ணப் பெற்றுக் கொடியசைய விளங்க ; தோல்
புடை  யார்ப்ப  கிடுகுப் படைகள் ஒருபுறத்தே ஆரவாரிக்க ; காடுகை
காய்த்திய  - காட்டிலுள்ள விறகுகளை வெட்டிக் குளிர் காய்ந்தழித்த ;
நீடு நாள் இருக்கை - நெடுநாட்கள் இருத்தலையுடைய; இன்ன வைகல்
பன்னாளாக - இத் தன்மையான நாட்கள் பலவாகக் கழிந்ததனாலே எ
- று.

தம்  வலியும் படை துணை முதலியவற்றின் வலியும் சேரவைத்து
நோக்கியபோதும் நின்வலி பெரிதாதல் கண்டு, அஞ்சி, தமக்கு வெற்றி
வருதல்  வேண்டித்  தெவ்வர்  தெய்வத்தைப் பரவுகின்றன ரென்பார்,
“பகை  பெருமையின்  தெய்வம்  செப்ப” என்றார.் எனவே, தம்மால்
செய்துகொள்ள   வேண்டிய   வலிமுற்றும்  செய்துகொண்டாராயினும்,
சேரனது   பகைமை   பெரிதாதற்   கஞ்சித்   தம்மின்   மேம்பட்ட
தெய்வத்தைத் துணை வேண்டுவராயின ரென்பதாம்.

எப்போதும்     படையேந்திய     வண்ணமாய்ப்    பகைவரை
எதிர்நோக்கியிருத்தலின்,  பாசறை  வீரர்க்கு அரிய இருக்கையாதலின்,
“ஆரிறை”    யென்றும்,   அற்றாயினும்   அவருள்ளத்தே   அச்சம்
நிலவாமையின்,   “அஞ்சா”   என்றும்,   பகைவர்க்கு   அச்சத்தைப்
பயத்தலின்,  “வெருவரு கட்டூர்” என்றும் கூறினார். ஆரிறை யஞ்சாக்
கட்டூர்,  வெருவர கட்டூர் என இயையும். பழையவுரைகாரர், “ஆரிறை
யஞ்சாக்  கட்டூரென்றது  வீரர்  அரிதாக இறுத்தலை யஞ்சாத பாசறை
யென்றவா”   றென்பர.்  வேற்று  நாட்டிடத்தே  புதிதாக  அமைக்கப்
பெறுதலின்,  பாசறையைக்  “கட்டூர்”  என்ப  ;  “வேறு புலத்திறுத்த
கட்டூர்” (பதிற் . 68) என்று பிறரும் கூறினமை காண்க.

தேர்,    யானை முதலியவை தாங்கிவரும் கொடிகள் பலவாதலின்,
“பல்கொடி  நுடங்கும்”  என்றும்,  இவற்றை யுயர்த்தித் தம் வலியாற்
செருக்கிவரும் பகைவரது  போர்பலவும்  நெறியறிந்து  தாக்கி வெற்றி
கொண்ட  யானை யென்றற்கு, “செறுநர் செல்சமந் தொலைத்த வினை
நவில்  யானை”  யென்றும்  கூறினார்.  இச் சிறப்பால் இப் பாட்டிற்கு
வினைநவில்  யானை யென்பது பெயராயிற்று. பழையவுரைகாரர், “பல்
கொடி  நுடங்கும்  யானை”  யென இயைத்து, “வினை நவில் யானை
யென்றது முன்பே போர் செய்து பழகிய யானை யென்றவா” றென்றும்,
“இச் சிறப்பானே முன்னின்ற அடைச்