| டுருகெழு மரபி னயிரை பரைஇ வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக் கொற்ற மெய்திய பெரியோர் மருக |
| 15 | வியலுளை யரிமான் மறங்கெழு குரிசில் விரவுப்பணை முழங்கு நிரைதோல் வரைப்பின் உரவுக்களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை ஆரெயி லலைத்த கல்கால் கவணை நாரரி நறவிற் கொங்கர் கோவே |
| 20 | உடலுநர்த் தபுத்த பொலந்தேர்க் குருசில் வளைகடன் முழவிற் றொண்டியோர் பொருந நீநீடு வாழிய பெரும நின்வயின் துவைத்த தும்பை நனவுற்று வினவும் மாற்றருந் தெய்வத்துக் கூட்ட முன்னிய |
| 25 | புனன்மலி பேரியா றிழிதந் தாங்கு வருநர் வரையாச் செழும்பஃ றாரம் கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப ஓவர் தன்ன வுருகெழு நெடுநகர்ப் பாவை யன்ன மகளிர் நாப்பண் |
| 30 | புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு தண்கமழ் கோதை சூடிப் பூண்சுமந்து திருவிற் குலைஇத் திருமணி புரையும் உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து வேங்கை விரிந்து விசும்புறு சேட்சிமை |
| 35 | அருவி யருவரை யன்ன மார்பிற் சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ மாகஞ் சுடர மாவிசும் புகக்கும் ஞாயிறு போல விளங்குதி பன்னாள் ஈங்குக் காண்கு வந்தனென் யானே |
| 40 | உறுகா லெடுத்த வோங்குவரற் புணரி நுண்மண லடைகரை யடைதரும் தண்கடற் படைப்பை நாடுகிழ வோயே. |
| துறை : செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : கல் கால் கவணை. |