பக்கம் எண் :

472

அருந்தென     விகாரமாயிற்று . பாவத்தை  அறங்கடை   யென்பது
போல  வறுமையைப்  பயங்கடை  யென்றார் ; “அறன் கடைப்படாஅ
வாழ்க்கையும்” (அகம். 155) என்று சான்றோர் கூறுதல் காண்க. இன்ன
நலங்கட்கிடையே  “வறுமை”  என்னாது, மங்கல மரபாற் “பயங்கடை”
யென்றாரென வறிக.
  

பலவாய்  மிக்குற்ற புது வருவாயாகிய கூலங்க ளென்பது, “பெரும்
பல் யாணர்க் கூலம்” எனப்பட்டது. பெருமை மிகுதி மேலும், பன்மை
வகை மேலும், யாணர் புதுமை மேலும் நின்றன. கார் காலத்து விளை
பயனாதலின், இவ்வாறு சிறப்பித்தாரென வறிக.
  

இக்    கூறியவாறு வளம் பலவும் பல்லூழி காலமாகக் குறைவின்றி
நிலைநின்  றொழுகுதல்  தோன்ற, “நன் பல்லூழி நடுவு நின் றொழுக”
என்றார்.  நடுவு  நின்  றொழுகுதலின்றி,  சகடக்கால்  போல் மிக்கும்
குறைந்தும்    இன்றாகியும்   ஒழுகுவது   இயல்பாதலின்,   அதனை
விலக்குதற்கு,    “நடுவு   நின்றொழுக”   என்றார். பல்லூழிதோறும்
அதனோெ்டாட்டி நன்கொழுகியதால், செல்வம் நிற்பதாயிற்றென் றறிக;
“பருவத்தோ  டொட்ட  வொழுகல்  திருவினைத், தீராமை யார்க்குங்
கயிறு” (குறள். 482) என்று சான்றோரும் கூறுதல் காண்க.
  

இனி,  பழையவுரைகாரர்,  “மிசையறவு  அறியாமலெனத்  திரிக்க”
என்றும், “நடு வென்றது நடுவு நிலைமையை” யென்றும் கூறுவர்.
  

9 - 11. பல் வேல்.......................பரவ .

உரை : பல் வேல் இரும்பொறை- பலவாகிய வேற்படையையுடைய
இரும்பொறையே  ;  நின்  கோல்  செம்மையின்  - நினது அரசியன்
முறை  செம்மையாக நடத்தலால்; நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த
-  நாடோறும் நாட்டவரெல்லாம்  நின்னைத் தொழுது பரவுவதாலும் ;
உயர்நிலை  யுலகத்து  உயர்ந்தோர்  பரவ  உயர்ந்த  நிலைமையினை
யுடைத்தாகிய   தேவருலக   வாழ்வுக்குரிய   ஒழுக்கத்   தாலுயர்ந்த
சான்றோர் பரவி வாழ்த்துதலாலும் ;
  

எல்லாப்   படையினும் சிறப்புடைமைபற்றி, வேற்படையை விதந்து,
“பல்  வேல்  இரும்பொறை” யென்றும், வானம் பொழுதொடு சுரத்தல்
முதலியன  வுண்டாவது  அரசியலின்  செம்மையா  லென்பார்,  “நின்
கோல்  செம்மையின்”  என்றும்,  அதனால்  நாட்டில் வாழும் மக்கள்
விழா   நாட்களிலும்   பிற   நாட்களிலும்   எப்போதும்   அரசனை
வாழ்த்துதலால்,   “நாளின்   நாளின்  நாடு  தொழுதேத்த”  என்றும்
கூறினார்.  விழாநாட்களில் மக்கள் வேந்தனைப் பரவி வாழ்த்துவதைச்
சிலப்பதிகாரத்து  விழா  நிகழ்  காதைகளிலும் திருமணக் காதையிலும்
பிற  நாட்களில்  வாழ்த்துவதை,  “வாழி யாதன் வாழி யவினி” எனத்
தொடங்கும்  ஐங்குறு  நூற்றுப்  பாட்டுக்களிலும் காணலாம். வையத்து
வாழ்வாங்கு   வாழும்   சான்றோர்   தம்  நல்லொழுக்க மாட்சியால்
வானுறையும்     தெய்வமாத    லொருதலையாதலின்,    அவர்களை
“உயர்நிலை யுலகத்