துயர்ந்தோர்” என்றும், “நாட்டில் நல்வாழ்வு நடைபெறுவதையே பெருநோக்கமாகக் கொண்டு, அதற்கு மிக்க காவலாயிருந்து அறம் வளர்க்கும் சிறப்புக் குறித்து அரசனை அவர்கள் வாழ்த்துமாறு தோன்றப் “பரவ” என்றும் கூறினார்; “உயர்நிலை யுலக மிவணின் றெய்தும், அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற், பெரியோர்” (மதுரைக். 471-3) என்று சான்றோர் கூறுதல் காண்க. 12 - 20. அரசியல்.....................பொலிந்தே உரை : அரசியல் பிழையாது- நீ மேற்கொண்டு புரியும் அரசுமுறை பிழையாமல்; செரு மேந் தோன்றி - போரில் வெற்றியால் மேம்பட்டு; நின் மாட்டு அடங்கிய நெஞ்சம் புகர் படுபு அறியாது - நின்பால் அன்பாலொடுங்கிய மனம் குற்றப்படாது ; கனவினும் பிரியா உறையுளொடு - கனவிலும் பிரிதலை யறியா துறைதலையும் ; தண் ணெனத் தகர நீவிய துவராக் கூந்தல் - தண்ணிதாகவுள்ள மயிர்ச் சாந்து தடவப்பட்டு நெய்ப்புப் புலராத கூந்தலையும் ; வதுவை மகளிர் நோக்கினர் மணமகளிர் கற்பால் வழிபட்டு நோக்கி; பெயர்ந்து வாழ்நாள் அறியும் நோக்கத்து வயங்கு சுடர் - பின்னரும் தன்னை நோக்கித் தம் வாழ்நாளெல்லையை யறியும் நோக்கத்துக் கேற்ப விளங்கும் ஒளியை யுடைய ; மீனொடு புரையும் கற்பின் - அருந்ததி போலும் கற்பினையும் ; வாணுத லரிவையொடு - ஒளி பொருந்திய நெற்றியினையுமுடைய அரிவையாகிய நின் மனைவியுடன் ; காண் வரப் பொலிந்து - அழகுற விளங்கி ; நீ நோயிலையாகியர் - நீ நோயின்றி வாழ்வாயாக எ - று. உறையுளையும், கூந்தலையும், கற்பினையும், நுதலையுமுடைய அரிவையொடு காண்வரப் பொலிந்து, அரசியல் பிழையாது, செருமேந் தோன்றி, நீ நோயிலையாகியர் என இயையும். அரசியற் பொறையால், பல்வகை யச்சத்துக் கிடமாதலின் நெஞ்சு மெலிதலாலும், செருவுடற்று மிடத்து விழுப்புண் படுதலாலும் நோயுண்டாமாதலின், “அரசியல் பிழையாது செருமேந் தோன்றி நோயிலையாகியர் நீயே” என்றார். பல்வகை யச்சமாவன “மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம், பிழையுயி ரெய்தின் பெரும்பே ரச்சங், குடிபுர வுண்டுங் கொடுங் கோலஞ்சும்” அச்சம் என்பன. இவற்றைச் செங்குட்டுவன், “மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல், துன்பமல்லது தொழுதக வில்லை” என்பது (சிலப். வஞ்சி. காட்சி 103-4) காண்க. “பிழையாமலெனத் திரிக்க” என்பது பழையவுரை . நாடு ாத்தல் குறித்து வேந்தன் பிரிந்த வழியும், வேறே அவனோடு புலத்தற்குரிய காரணங்கள் உளவாகிய வழியும், அவன்பாற் சென்றொடுங்கிய அன்பால், நெஞ்சின்கண், “அன்பிலை கொடியை” என்பன போலும் சொல் நிகழ்தற்குரிய நினைவு தோன்றுவதில்லை யென்றற்கு, ‘அடங்கிய நெஞ்சம் புகர்படு பறியாது” என்றும், நனவிற் பிரியினும். கனவிற் கண்டு நனவிற் |