பக்கம் எண் :

49

திருச்சிற்றம்பலம்

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய

பதிற்றுப்பத்து

மூலமும் விளக்க உரையும்

கடவுள் வாழ்த்து

எரியெள்ளு வன்ன நிறத்தன் விரியிணர்க்
கொன்றையம் பைந்தா ரகலத்தன் பொன்றார்
எயிலெரி யூட்டிய வில்லன் பயிலிருள்
காடமர்ந் தாடிய வாடல னீடிப்
புறம்புதை தாழ்ந்த சடையன் குறங்கறைந்து
வெண்மணி யார்க்கும் விழவின னுண்ணூற்
சிரந்தை யிரட்டும் விரலனிரண் டுருவாய்
ஈரணி பெற்ற வெழிற்றகைய னேரும்
இளம்பிறை சேர்ந்த நுதலன் களங்கனி
மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன் றேறிய
சூலம் பிடித்த சுடர்ப்படைக்
காலக் கடவுட் குயர்கமா வலனே.
  

திணை : பாடாண்டிணை
துறை : கடவுள் வாழ்த்து.
வண்ணம் : ஒழுகுவண்ணம்.
தூக்கு : செந்தூக்கு.
 

உரை : எரி  எள்ளு  அன்ன    நிறத்தன் - நெருப்பை  இகழ்ந்
தாற்போன்ற  சிவந்த நிறத்தை யுடையனாய்; விரி இணர் கொன்றையம்
பைந்தார் அகலத்தன் - விரிந்த பூங்கொத்துக்களையுடைய கொன்றைப்
பூவால் தொடுக்கப்பட்ட பசிய மாலையணிந்த மார்பினை யுடையனாய்;
பொன்றார்  எயி்ல் எரி  யூட்டிய  வில்லன் - கெடாத அவுணருடைய
எயில்   மூன்றும்   வெந்தழியுமாறு  தீக்கொளுவி  யழித்த  வில்லை
யுடையனாய்;