பாலைக் கௌதமனார் பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம். அடு நெய்யாவுதி, கயிறுகுறு முகவை, ததைந்த காஞ்சி, சீர்சால் வெள்ளி, கானுணங்கு கடுநெறி, காடுறு கடுநெறி, தொடர்ந்த குவளை, உருத்து வரு மலிர்நிறை, வெண்கை மகளிர், புகன்ற வாயம் இவை பாட்டின் பதிகம். பாடிப் பெற்ற பரிசில், நீர் வேண்டியது கொண்மின் என, யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல்வேண்டும் என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பிக்க, பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினர். இமயவரம்பன் றம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான். |