துறை : செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கும்வஞ்சித்தூக்கும். பெயர் : பூத்தநெய்தல். 1 - 10. தொறுத்தவயல்.............நாடு. உரை : தொறுத்த வயல் - ஆனிரைகள் புல்மேயும் கொல்லைகள்; ஆரல் பிறழ்நவும் - ஆரல்மீன் பிறழ்ந்துலாவும், நீர் நிரம்பிய வயல்களாயினவும்; ஏறு பொருத செறு - பன்றிகள் தம்முடைய மருப்புக்களாற் கிண்டிப் புழுதியாக்கிய புலம்; உழாது வித்துநவும் - ஏரான் உழுதலை வேண்டாது காலாற் |