(மதுரைக். 150). “வேந்துறு தொழிலே யாண்டின தகமே” (தொல். கற். 48) என்பது விதி மேல்வந்தபோதே அடிபணியாது நெடிது தங்குமாறு இகல் விளைத்தமையால், அதற்கேதுவாய பகைவர் வலியழிப்பான் முனையிடத்தே எரியிட்டுக் கொளுத்தி மாறாச் சினம் சிறந்து விளங்குதலின், சேரலாதனை, “முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு” நின்றானென்றும், தீயிடாது பொருதழித்த இடங்கள் தீயால் அழிவுற்ற இடங்கள் போல உருக்குலைந் தழிந்தன என்பார், “அழல்கவர் மருங்கின் உருவறக் கெடுத்து” என்றும் கூறினார். மருங்கின் என்புழி, இன்னுருபு ஒப்புப் பொருட்டு. செய்தெ னெச்சம் காரணப் பொருட்டு. மரம் ஈண்டுக் காவற்காடு; மதிற்கதவின் பி்ன்னே கிடந்து அதற்கு வன்மைதரும் கணையமரம் எனினுமாம். களிறுகள் நிரை நிரையாகச் செல்லும் இயல்பினவாதலின், “நிரைகளி” றென்றும், அவை எண்ணிறந்தனவாய் வெள்ளம்போல் பரந்து சேறலின், “நிரைகளிறொழுகிய வெள்ளம்” என்றும், இவ் யானைப்படையொடு கூடிய பெருந்தானை பகைவர்க்கு நிரயத் துன்பம் போலும் துன்பத்தைச் செய்யும் இயல்பிற்றாதல் தோன்ற, நிரைய வெள்ளமென்றும் கூறினார். “விரவுக் கொடி யடுக்கத்து நிரையத் தானையொடு” (சிலப். 26 : 37) எனச் சான்றோர் கூறுதல் காண்க. “நிரையவெள்ள மென்றது, பகைவர்க்கு நிரையபாலரைப்போலும் படைவெள்ள மென்றவாறு; நிரைய மென்றது, நிரையத்து வாழ்வாரை; இச் சிறப்பானே இதற்கு (இப் பாட்டிற்கு”, நிரையவெள்ளமென்று பெயராயிற்” றெனப் பழையவுரை கூறுகிறது. “யானையுடைய படைகாண்டல் முன்னினிதே” (இனி. 40 : 5) என்பவாகலின், யானைப்படை விசேடித்துரைக்கப்பட்டது அரணிடத்தே இவற் கஞ்சி மடிந்துறையும் பகை மன்னர் வெற்றியெய்துவது காண்பாராய்க் கழங்கிட்டு நோக்கித் தமக்கு அது வாராமை யறிந்து ஊக்க மழிந்திருத்தல் தோன்ற, “ஆடுகழங் கழிமன்” என்றார். இனி, “எல்லா மெண்ணின் இடுகழங்கு தபுந” (பதிற். 32) என்பதுகொண்டு. எண்ணிறந்த தானைவீரரையுடைய கூட்டம் என்றற்கு, “ஆடுகழங் கழிமன் மருங்கு” என்றா ரெனினுமாம். மருங்கு, சுற்றம்; ஈண்டுத் தானைவீரர் மேற்று. நிரைய வெள்ளம் மன்மருங் கறுப்ப இவன் தீயிட்டும் படைசெலுத்தியும் அழித்த செய்தியை, “உருவறக் கெடுத்து” என்றார். காற்று மோதுதலால் தீயானது நாற்றிசையும் பரந்து எரிதலின். எழுகின்ற புகை எங்கணும் பரவி நுண்ணிய பிசிராய்க் கெட்டு மறைய, எரியுமிடம் கரிந்து உருவழிந்து சிதைதல் கூறியது, நாடு உருவறக் கெட்டழிதல் புலப்படுத்தற்கு. இஃது எரிபரந்தெடுத்தல். 9 - 15. வெண்பூ................வந்திசினே. உரை : வெண்பூ வேளையொடு - வெள்ளிய பூக்களையுடைய வேளைக் கொடியும்; பைஞ்சுரை கலித்து - பசிய சுரைக்கொடியும் தழைத்து வளர; பீர் இவர்பு பரந்த - பீர்க்கங் கொடியேறிப் படர்ந்த; நீரறு நிறை முதல் - நீரற்ற உழுசால்களில்; முதல் சிதை சிவந்த காந்தள் - வேரோடு காய்ந்தழிந்த சிவந்த காந்தள் நிறைந்து; புலவு வில் |