48.மன்னனை 'நீடு வாழ்க' என வாழ்த்துதல் | | பைம் பொன் தாமரை பாணர்ச் சூட்டி, ஒள் நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி, கெடல் அரும் பல் புகழ் நிலைஇ, நீர் புக்கு, கடலொடு உழந்த பனித் துறைப் பரதவ! 'ஆண்டு நீர்ப் பெற்ற தாரம், ஈண்டு, இவர் | 5 | கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும் கல்லா வாய்மையன் இவன், எனத் தத்தம் கை வல் இளையர் நேர் கை நிரைப்ப, வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை, முனை சுடு கனை எரி எரித்தலின், பெரிதும் | 10 | இதழ் கவின் அழிந்த மாலையொடு, சாந்து புலர் பல் பொறி மார்ப! நின் பெயர் வாழியரோ நின் மலைப் பிறந்து, நின் கடல் மண்டும் மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின், பொழில் வதி வேனில் பேர் எழில் வாழ்க்கை, | 15 | மேவரு சுற்றமோடு உண்டு, இனிது நுகரும், தீம் புனல், ஆயம் ஆடும், காஞ்சிஅம் பெருந் துறை மணலினும் பலவே! | | துறை:இயல்மொழி வாழ்த்து வண்ணமும் தூக்கும்:அது பெயர்:பேர் எழில் வாழ்க்கை | |
| |