27.வென்றிச் சிறப்பு | | சிதைந்தது மன்ற, நீ சிவந்தனை நோக்கலின் தொடர்ந்த குவளைத் தூ நெறி அடைச்சி, அலர்ந்த ஆம்பல் அக மடிவையர், சுரியல்அம் சென்னிப் பூஞ் செய் கண்ணி அரியல் ஆர்கையர், இனிது கூடு இயவர், | 5 | துறை நணி மருதம் ஏறி, தெறுமார், எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின், பழனக் காவில் பசு மயில் ஆலும்; பொய்கை வாயில் புனல் பொரு புதவின், நெய்தல் மரபின், நிரை கள், செறுவின் | 10 | வல் வாய் உருளி கதுமென மண்ட, அள்ளல் பட்டு, துள்ளுபு துரப்ப, நல் எருது முயலும் அளறு போகு விழுமத்துச் சாகாட்டாளர் கம்பலை அல்லது, பூசல் அறியா நல் நாட்டு | 15 | யாணர் அறாஅக் காமரு கவினே! | | துறை:செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம்:ஒழுகு வண்ணம் தூக்கு:செந்தூக்கு பெயர்:தொடர்ந்த குவளை | |
| |