53.அடைந்தவர்க்கு அருளலொடு படுத்து, மன்னவன் வென்றிச் சிறப்புக் கூறுதல் | | வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து, அவர் வாடா யாணர் நாடு திறை கொடுப்ப, 'நல்கினை ஆகுமதி, எம்' என்று; அருளி, கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின் தொல் புகழ் மூதூர்ச் செல்குவை ஆயின், | 5 | செம்பொறிச் சிலம்பொடு அணித் தழை தூங்கும் எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில், கோள் வல் முதலைய குண்டு கண் அகழி, வான் உற ஓங்கிய வளைந்து செய் புரிசை, ஒன்னாத் தெவ்வர் முனை கெட விலங்கி, | 10 | நின்னின் தந்த மன் எயில் அல்லது, முன்னும் பின்னும் நின் முன்னோர் ஓம்பிய எயில் முகப்படுத்தல் யாவது? வளையினும், பிறிது ஆறு சென்மதி, சினம் கெழு குருசில்!- எழூஉப் புறந்தரீஇ, பொன் பிணிப் பலகைக் | 15 | குழூஉ நிலைப் புதவின் கதவு மெய் காணின், தேம் பாய் கடாத்தொடு காழ் கை நீவி, வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல் ந்து கை சுருட்டி, தோட்டி நீவி, மேம்படு வெல் கொடி நுடங்க, | 20 | தாங்கல் ஆகா, ஆங்கு நின் களிறே. | | துறை: செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணமும் தூக்கும்:அது பெயர்:குண்டு கண் அகழி | |
| |