இளஞ்சேரல் இரும்பொறை  


ஒன்பதாம் பத்து - பதிகம்

குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
வேண்மாள் அந்துவஞ்செள்ளை ஈன்ற மகன்,
வெரு வரு தானையொடு வெய்துறச்செய்து சென்று,
இரு பெரு வேந்தரும் விச்சியும் வீழ,
அரு மிளைக் கல்லகத்து ஐந்து எயில் எறிந்து,

5

பொத்தி ஆண்ட பெருஞ் சோழனையும்,
வித்தை ஆண்ட இளம் பழையன் மாறனையும்,
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று,
வஞ்சி மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி,
மந்திர மரபின் தெய்வம் பேணி,  

10

மெய் ஊர் அமைச்சியல் மையூர் கிழானைப்
புரை அறு கேள்விப் புரோசு மயக்கி,
அருந் திறல் மரபின் பெருஞ் சதுக்கு அமர்ந்த
வெந் திறல் பூதரைத் தந்து, இவண் நிறீஇ,
ஆய்ந்த மரபின் சாந்தி வேட்டு,     

15

மன் உயிர் காத்த மறு இல் செங்கோல்
இன் இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப
பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப் பாட்டு.


அவைதாம்:நிழல் விடு கட்டி, வினை நவில் யானை, பல்
தோல் தொழுதி, தொழில் நவில் யானை, நாடு காண் நெடு
வரை, வெந் திறல் தடக்கை, வெண் தலைச் செம் புனல்,
கல் கால் கவணை, துவராக் கூந்தல், வலி கெழு தடக் கை.
இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்: 'மருள் இல்லார்க்கு மருளக்
கொடுக்க' என்று, உவகையின் முப்பத்தீராயிரம் காணம்
கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளம் மிகப்
படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்கு
ஆகா அருங்கல வெறுக்கையொடு, பன்னூறாயிரம் பாற்பட
வகுத்து, காப்பு மறம் தான் விட்டான் அக் கோ

குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு
வீற்றிருந்தான்.

உரை