82.வென்றிச் சிறப்பு | | பகை பெருமையின், தெய்வம் செப்ப, ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர், பல் கொடி நுடங்கும் முன்பின் செறுநர் செல் சமம் தொலைத்த வினை நவில் யானை கடாஅம் வார்ந்து, கடுஞ் சினம் பொத்தி, | 5 | வண்டு படு சென்னிய பிடி புணர்ந்து இயல; மறவர் மறல; மாப் படை உறுப்ப; தேர் கொடி நுடங்க; தோல் புடை ஆர்ப்ப; காடுகை காய்த்திய நீடு நாள் இருக்கை இன்ன வைகல் பல் நாள் ஆக | 10 | பாடிக் காண்கு வந்திசின், பெரும! பாடுநர், கொளக் கொளக் குறையாச் செல்வத்து, செற்றோர் கொலக் கொலக் குறையாத் தானை, சான்றோர் வண்மையும், செம்மையும், சால்பும், மறனும், புகன்று புகழ்ந்து, அசையா நல் இசை, | 15 | நிலம் தரு திருவின், நெடியோய்! நின்னே. | | துறை:காட்சி வாழ்த்து வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு:செந்தூக்கு பெயர்:வினை நவில் யானை | |
|
|