20.மன்னனது குணங்களைக் கூறி வாழ்த்துதல் | | 'நும் கோ யார்?' என வினவின், எம் கோ இரு முந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச் சென்று, கடம்பு முதல் தடிந்த கடுஞ் சின முன்பின், நெடுஞ்சேரலாதன்; வாழ்க அவன் கண்ணி! | 5 | வாய்ப்பு அறியலனே, வெயில் துகள் அனைத்தும், மாற்றோர் தேஎத்து மாறிய வினையே; கண்ணின் உவந்து, நெஞ்சு அவிழ்பு அறியா நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே, கனவினும்; ஒன்னார் தேய, ஓங்கி நடந்து, | 10 | படியோர்த் தேய்த்து, வடி மணி இரட்டும் கடாஅ யானைக் கண நிரை அலற, வியல் இரும் பரப்பின் மா நிலம் கடந்து, புலவர் ஏத்த, ஓங்கு புகழ் நிறீஇ, விரிஉளை மாவும், களிறும், தேரும், | 15 | வயிரியர், கண்ணுளர்க்கு ஓம்பாது வீசி, கடி மிளை, குண்டு கிடங்கின், நெடு மதில், நிலை ஞாயில், அம்புடை ஆர் எயில் உள் அழித்து உண்ட அடாஅ அடு புகை, அட்டு மலர் மார்பன்; | 20 | எமர்க்கும், பிறர்க்கும், யாவர்ஆயினும், பரிசில் மாக்கள் வல்லார்ஆயினும், கொடைக் கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்; மன் உயிர் அழிய, யாண்டு பல மாறி, தண் இயல் எழிலி தலையாது ஆயினும், | 25 | வயிறு பசி கூர ஈயலன்; வயிறு மாசு லீஇயர், அவன் ஈன்ற தாயே! | | துறை:இயல் மொழி வாழ்த்து வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு:செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர்:அட்டு மலர் மார்பன் | |
|
|