58.
|
ஆடுக
விறலியர் பாடுக பரிசிலர்
வெண்டோட் டசைத்த வொண்பூங் குவளையர்
வாண்முகம்பொறித்த மாண்வரி யாக்கையர்
செல்லுறழ் மறவர்தங் கொல்படைத் தரீஇயர் |
5
|
இன்றினிது
நுகர்ந்தன மாயி னாளை
மண்புனை யிஞ்சி மதில்கடந் தல்ல
துண்குவ மல்லேம் புகாவெனக் கூறிக்
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்
பொய்படு பறியா வயங்குசெந் நாவின் |
10
|
எயிலெறி
வல்வி லேவிளங்கு தடக்கை
ஏந்தெழி லாகத்துச் சான்றோர் மெய்ம்மறை
வான வரம்ப னென்ப கானத்துக்
கறங்கிசைச் சிதடி பொரியரைப் பொருந்திய
சிறியிலை வேலம் பெரிய தோன்றும் |
15
|
புன்புலம் வித்தும வன்கை வினைஞர்
சீருடைப் பல்பக டொலிப்பப பூட்டி
நாஞ்சி லாடிய கொழுவழி மருங்கின்
அலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பி னாடுகிழ வோனே. |
துறை
- செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும்
அது. பெயர் - ஏவிளங்கு தடக்கை (10)
(ப
- ரை) 2. வெண்டோடு - பனந்தோடு; தோட்டின்
கண்ணென விரிக்க. அசைத்தல் - தங்குவித்தல். 3. வாண்முகம் -
வாள்வாய்.
குவளையர்
(2) என்பது வினையெச்ச வினைக்குறிப்பு முற்று;
அதனைக் கூறி (7) என்பதனொடு முடிக்க.
யாக்கையராகிய
(3) மறவர் (4) என இருபெயரொட்டு.
8.
கண்ணி கண்ணுதல் - தாங்கள் சூடிய போர்க்கண்ணிக்கு
ஏற்ப வினைசெயக் கருதுதல்.
10.
1எயிலெறி வல்விலென்றது விற்படையினை. ஏ விளங்கு
தடக்கை யென்றது ஏத்தொழிலுக்குள்ள கூறுபாடெல்லாம் விளங்கிய
தடக்கை யென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, 'ஏ விளங்கு தடக்கை' என்று
பெயராயிற்று.
14.
பெரிய தோன்றுமென்றது பெருகத் தோன்றுமென்றவாறு.
16.
பல்பகட்டையென விரித்துப் பகட்டை அவை ஒலிப்பப்
பூட்டியெனக் கொள்க.
பூட்டித்
(16) திருமணி பெறூஉம் (18) என முடிக்க.
வயவர்
பெருமகன் (8) சான்றோர் மெய்ம்மறையாகிய (11)
வான வரம்பனைப் (12) புன்புலம் வித்தும் வன்கை வினைஞர் தம்
(15) கொழுவழி மருங்கின் (17) திருமணி பெறும் (18) நாடுகிழவோன்
(19) என்று சொல்லுவார்கள் (12); அவன் அவ்வாறு
செல்வக்குறையிலனாதலான் அத்தரத்திற்கு ஏற்ப நமக்கு வேண்டுவன
தருதலிற் குறையுடையனல்லன்; வந்தமைக் கேற்ப விறலியராயுள்ளீர்,
ஆடலைக் குறையறச் செலுத்துமின்; பரிசிலராயுள்ளீர், நீயிரும் நும்
கவிகளைப் பாடிக் கைவரப் பண்ணுமின் (1) என்று மாறிக் கூட்டி
வினைமுடிவு செய்க.
வானவரம்பன்
(12) நாடுகிழவோன் (19) எனக்
கூட்டவேண்டுதலின் மாறாயிற்று.
இதனாற்
சொல்லியது அவனாட்டுச் செல்வமும் அதற்கேற்ற
அவன் கொடையும் கூறியவாறாயிற்று.
ஆடுக
பாடுகவென்றதற்கு அவன்பாற்சென்று ஆடுக
பாடுகவெனக் கூறாது இவ்வாறு கூறியதன் கருத்து,
2ஆற்றுப்படையென்னாது 3செந்துறைப் பாடாணென்று
கிடந்தமையானெனக் கொள்க.
(கு
- ரை) 1. விறலியரே ஆடுக; பரிசிலரே பாடுக.
2-4.
பகைவரது இயல்பு.
2.
வெள்ளிய பனந்தோட்டிலே தொடுத்துக் கட்டிய
ஒள்ளிய பொலிவு பெற்ற குவளைப்பூவைச் சூடியவராய். பூக்களைப்
பனந்தோட்டிலே தொடுத்தல்: "வேங்கை யொள்ளிணர் நறுவீப்,
போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்து" (புறநா.
265 : 2 - 3)
3.
வாளினது வாய் தன் அடையாளத்தை எழுதிய மாட்சிமைப்
பட்ட தழும்புகளையுடைய உடம்பினராகிய. மு. பதிற்.
67 : 14.
4.
இடியை ஒத்த மறவரது கொல்லுகின்ற படையைக்
கொணரும் பொருட்டு. 5 - 7. வயவரது வஞ்சினம்.
5.
இன்றைக்கு இனிதாக நுகர்ந்தோமானால் நாளைக்கு.
6.
அரைத்த மண்ணால் கட்டப்பட்ட இஞ்சியையுடைய
மதிலைக் கடந்தல்லாமல்; 'அரைம ணிஞ்சி நாட்கொடி நுடங்கும்'
(புறநா. 341 : 5)
7.
புகா உண்குவம் அல்லேம் எனக்கூறி - உணவை
உண்ணமாட்டேம் என்று வஞ்சினம் கூறி; இது
தொல்லெயிற்கிவர்தலென்றும் முற்றுமுதிர்வென்றும் கூறப்படும்;
"இற்றைப் பகலு ளெயிலகம் புக்கன்றிப், பொற்றாரான் போனகங்கைக்
கொள்ளானால்" (தொல், புறத். 12, ந.
மேற்.)' "காலை முரச
மதிலியம்பக் கண்கனன்று, வேலை விறல்வெய்யோ
னோக்குதலும்-மாலை, அடுக மடிசிலென் றம்மதிலு ளிட்டார்,
தொடுகழலார் மூழை துடுப்பு" (பு. வெ. 117)
8.
தாம் சூடிய போர்க்கண்ணிக்கு ஏற்ற வினைசெய்யக்
கருதிய வீரர்களையுடைய பெருமையையுடையான்.
9.
தாம் கூறிய வஞ்சினங்கள் பொய்படுதலை அறியாதனவாய்
விளங்குகின்ற செவ்விய நாவினையும்.
10.
மதில்களை எறிகின்ற வல்வில்லின்கண்ணே அம்புகளைத்
தொடுத்தற்குரிய கூறுபாடுகளெல்லாம் முற்றக் கற்று விளங்கிய பெரிய
கையினையும்; எயிலெறி வல்வில் என்றது, விற்படையொன்றனையே
துணையாகக் கொண்டு பகைவர் மதிலைப் கொள்ளுவரென்றபடி.
11.
சான்றோர் மெய்ம்மறை: பதிற். 14 : 12.
11-2.
அழகை எய்திய மார்பினையும் உடைய வீரருக்குக்
கவசம் போன்றவனாகிய வானவரம்பனென்று அறிந்தோர் சொல்லுவர்.
12-5.
புன்புலத்தின் இயல்பு.
12-4.
காட்டினிடத்தே ஒலிக்கின்ற ஓசையையுடைய
சிள்வீடு பொரிந்த அடிமரத்தின்கண்ணே பொருந்திய சிறிய
இலைகளையுடைய வேலமரம் பெருகத் தோன்றும்; சிறிய இலை
சிறியிலையென்றாயிற்று; தொகுத்தல்; "சிறியிலை வெதிரின்" (புறநா.
109 : 4). சிதடி: பதிற். 23:2.
15.
புன்புலத்தில் வித்துக்களை விதைக்கின்ற வலிய
கையையுடைய தொழில்செய்வோர். 16. சிறப்பையுடைய பல
கடாக்களை அவை ஒலிக்கும்படி நுகத்தின் கண்ணே பூட்டி
உழுதலால். பூட்டி: எச்சத்திரிபு.
17.
கலப்பைகள் உழுத கொழுவினது படைச்சாவின் பக்கத்தே.
18-9.
அசைகின்ற ஒளியையுடைய அழகிய மணியைப்
பெறுவதற்கு இடமான, அகன்ற இடத்தையுடைய ஊர்களையுடைய
நாட்டுக்கு உரிமையுடையோனை.
காட்டில்
மணிபெறுதல்:பதிற். 21 : 20 - 22, 66
: 19 - 20,
76 : 14 - 5.
நாடுகிழவோனை
(19) மெய்ம்மறையாகிய (11)
வானவரம்பனென்ப (12) என முடிவு செய்க.
(பி
- ம்) 7.
புகவென. 9. படுவறியா, 11.மேமறை.
17.மருங்கில். (8)
1'படைவெள்ளத்தை
ஆரெயிலென்றது அரசன்றனக்கு ஆரெயில்
போல அரணாய் நிற்றலினெனக் கொள்க' (பதிற்.
33: 6 - 11, உரை)
2தொல்.
புறத். 36.
3பதிற்.
11. துறை. |