64.
|
வலம்படு
முரசின் வாய்வாட் கொற்றத்துப்
பொலம்பூண் வேந்தர் பலர்தில் லம்ம
அறங்கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய
உரைசால வேள்வி முடித்த கேள்வி |
5
|
அந்தண
ரருங்கல மேற்ப நீர்பட்
டிருஞ்சே றாடிய மணன்மலி முற்றத்துக்
களிறுநிலை முணைஇய தாரருந் தகைப்பிற்
புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே
எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவி |
10
|
அலங்கும்
பாண்டி லிழையணிந் தீமென
ஆனாக் கொள்கையை யாதலி னவ்வயின்
மாயிரு விசும்பிற் பன்மீ னொளிகெட
ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார்
உறுமுரண் சிதைத்தநின் னோன்றாள் வாழ்த்திக் |
15
|
காண்கு
வந்திசிற் கழறொடி யண்ணல்
மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல்
இதழ்வனப் புற்ற தோற்றமொ டுயர்ந்த
மழையினும் பெரும்பயம் பொழிதி யதனாற்
பசியுடை யொக்கலை யொரீஇய |
20 |
இசைமேந்
தோன்றனின் பாசறை யானே. |
துறை
- 1காட்சிவாழ்த்து. வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - உரைசால் வேள்வி. (4)
(ப
- ரை) 2.
பலர்தில்லென்புழி, தில் ஒழியிசை.
4.
உரைசால் வேள்வியென்றது யாகங்கள் எல்லாவற்றிலும்
பெரியவும் அரியவுமாக உரையமைந்த வேள்வியென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, 'உரைசால் வேள்வி' என்று
பெயராயிற்று.
7.
களிறு நிலைமுணவுதற்குக் காரணம் இருஞ்சேறாடுதல் (6)
தாரருந்தகைப்பென்றது
ஒழுங்குபாட்டையுடைய ஆண்டு
வாழ்வார்க் கல்லது பிறர் புகுதற்கரிய மாளிகைக் கட்டணமென்றவாறு.
தார்
- ஒழுங்கு. தகைப்பு - 2கட்டணம்.
8.
புறஞ்சிறை - அதன் சிறைப்புறம். 9. எஃகுபடை - கூரிய
படை. 10. பாண்டில் - தேர் பூணும் எருதுகள்.
8-10.
புறஞ்சிறை வயிரியர்க் காணின் ஈமென்றது நம்மை
அவர்கள் காணவேண்டுவதில்லை, நம் மாளிகை மதிற்புறத்து நீயிர்
காணினும் கொடுமினென்றவாறு.
ஈமென்றது
அவ்வீகைத் துறைக்குக் கடவாரை.
11.
அவ்வயினென்றது நின்னூரிடத்தென்றவாறு.
ஈமென
(10) அவ்வயின் ஆனாக் கொள்கையையாதலின் (11)
என மாறிக் கூட்டுக.
ஆதலின்
(11) என்பதனை மழையினும் பெரும்பயம்
பொழிதி (18) என்பதனோடு கூட்டி நின்னூரிடத்து அவ்வயின்
ஆனாக்கொள்கையையாய்ப் போந்தபடியாலே ஈண்டு நின்
பாசறையிடத்து மழையினும் பெரும்பயம் பொழியா
நின்றயெனவுரைக்க.
ஞாயிறு
தோன்றியாங்கு மாற்றார் (13) உறுமுரண் சிதைத்த
(14) என முடிக்க.
நெய்தல்
(16) இதழ்வனப்புற்ற தோற்றமொடு (17)
பயம்பொழிதி (18) எனக்கூட்டி, இவன்றன் நிறம் கருமையாக்கி
அந்நிறத்தோற்றத்தானும் மழையோடு உவமமாக்கியுரைக்க.
பசியுடை
யொக்கலை (19) அப்பசியை ஒருவியவெனப் பசி
வருவிக்க.
உலகத்து
வேந்தர் பலருளர் (2); அவராற் பெரும்பயன்
என்? தகைப்பிற் (7) புறஞ்சிறை வயிரியர்க்காணின் (8) ஈமென
(10) அவ்வயின் ஆனாக் கொள்கையையாதலின் (11) மழையினும்
பெரும்பயம் பொழிதி (18); அதனால் அண்ணல் (15), தோன்றல்
(20), பசியுடையொக்க லொரீஇய (19) பாசறையானே (20) நின்
நோன்றாள் வாழ்த்திக் (14) காண்கு வந்திசின் (15) என மாறிக்
கூட்டி வினைமுடிவு செய்க.
அதனால்
(18) என்பதன் பின் 'அண்ணல்' (15), 'தோன்றல்' (20)
என்னும் விளிகள் நிற்கவேண்டுதலின் மாறாயிற்று.
இதனாற்
சொல்லியது அவன் கொடைச்சிறப்பினை
வென்றிச்சிறப்பொடு படுத்துக் கூறியவாறாயிற்று.
4-5.
ஈயவென்றது பாடமாயின், உரைசாலென்றது கூனாம்.
'உரைசால் வேள்வி முடித்த கேள்வி யந்தணர், அருங்கல மேற்ப
வீயநீர் பட்டு' என்று பாடமாகவேண்டும்.
(கு
- ரை) 1-2. வெற்றியுண்டாதற்குக் காரணமான
முரசினையும், பகைவரைக் கொல்லுதலில் தப்பாத வாளையும்,
அரசுரிமையையும் உடைய பொன்னாற் செய்த ஆபரணங்களை
அணிந்த அரசர் பலர் உலகத்துள்ளார்; அவரால் யாது பயன்?
தில்: ஒழியிசைப் பொருளில் வந்தது.
4.
கேள்வி, வேள்வி: பதிற். 74 : 1 - 2.
4-5.
"கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த, வேள்வித் தூணத்து"
(பெரும்பாண். 315 - 6)
3-5.
அறத்தையே கூறி விளங்கிய செவ்விய நாவினையுடைய
விளங்கிய புகழச்சியமைந்த செய்தற்கரிய யாகங்களைச் செய்துமுடித்த,
வேதத்தை ஓதிய அந்தணர் அரிய கலங்களைப் பெற்றுக்கொள்ள
அவற்றை நீர் வார்த்துக் கொடுத்தலால், அந்நீர் பட.
நாவின்
அந்தணரென இயைக்க; "அறங்கரை நாவினான்மறை
முற்றிய" (தொல். சிறப்புப்.).
கேள்வியென்றது கருதியென்னும் பெயர்ப்
பொருளது (பதிற். 21 : 1, உரை.)
7.
தகைப்பு: பட்டினப். 143; பெருங்.
1. 47 : 44, 3. 24 : 200.
6-7.
கரிய சேறு உண்டான மணல் மிக்க முற்றத்தினிடத்தே,
களிறு தான் - நிற்றலை வெறுத்த ஒழுங்கையுடைய, புலவர் பொருநர்
அந்தணர் என்போருக்கு அன்றிப் பிறர் புகுதற்கு அரிய
கட்டணத்தில்.
8.
அதனது எல்லையினிடத்தே கூத்தரைக் கண்டால், விரைய.
9.
மு. பதிற். 62 : 3
10.
பாண்டில் -நாரை எதுரு (சிறுபாண். 260. ந,கலித்.
109 : 4, ந.)
9-11.
கூரிய அம்பு முதலிய ஆயுதங்கள் பக்கரை
முதலியவற்றை அறுத்த, கத்திரிகையால் மட்டம் செய்யப்பெற்ற
பிடரிமயிரையுடைய குதிரைகளையும், விளங்கும் தேர் பூணும்
எதுருகளையும் அவற்றிற்கு உரிய இழைகளை யணிந்து கொடுங்கள்
என்று அவ்வீதலுக்கு உரியாரை ஏவி, அவ்வீதலினிடத்தே அமையாத
விரதத்தையுடையாயாதலால்.
11-5.
கழலும்படி இடப்பட்ட தொடியையணிந்த தலைவ, அழகிய
நின்னூரினிடத்தே, கரிய பெரிய ஆகாயத்தில் பல நட்சத்திரங்கள்
ஒளி கெடும்படி சூரியன் தோன்றினாற்போல, பகைவரது மிக்க
மாறுபாட்டைக் கெடுத்த நினது வலிய முயற்சியை வாழ்த்திக்
காண்பேனாகி வந்தேன்.
அவ்வயின்
சிதைத்த என இயையும்.
16-8.
கரிய நிறம் உண்டாகின்ற மலர்களையுடைய கழியில்
மலர்ந்த நெய்தற் பூவினது இதழின் அழகை ஒத்த தோற்றத்தோடு,
உயர்ந்த மேகத்தைக் காட்டிலும் பெரிய பயனை இரவலர்க்குப்
பொழிதலை உடையாய். நெய்தல் மலரின் கருமை சேரன் நிறத்திற்கு
உவமை; நிறத்தாலும் மேகம் இவனுக்கு உவமையாயிற்று.
18-20.
ஆதலால், பசியைத் தொன்றுதொட்டே உடைய
சுற்றத்தாரை அப்பசி நீங்கும்படி செய்ய அதனாற் புகழ் மேவிய
தோன்றல், நின் பாசறையினிடத்தே.
நின்
பாசறையான் (20) காண்கு வந்திசின் (15) என முடிக்க.
(பி
- ம்.) 13. தோன்றியன்ன. 17. நோக்கமொடு.
(4)
1பதிற்.
41, துறை.
2தக்க.
137, உரை.
|