65.
|
எறிபிண
மிடறிய செம்மறுக் குளம்பிற்
பரியுடை நன்மா விரியுளை சூட்டி
மலைத்த தெவ்வர் மறந்தபக் கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும |
5
|
வில்லோர்
மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ
பூணணிந் தெழிலிய வனைந்துவர லிளமுலை
மாண்வரி யல்குன் மலர்ந்த நோக்கின்
வேய்ப்புரை பெழிலிய விளங்கிறைப் பணைத்தோட்
காமர் கடவுளு மாளுங் கற்பிற் |
10
|
சேணாறு
நறுநுதற் சேயிழை கணவ
பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை
பூணணிந்து விளங்கிய புகழ்சான் மார்பநின்
நாண்மகி ழிருக்கை யினிதுகண் டிகுமே
தீந்தொடை நரம்பின் பாலை வல்லோன் |
15
|
பையு
ளுறுப்பிற் பண்ணுப் பெயர்த்தாங்குச்
சேறுசெய் மாரியி னளிக்குநின்
சாறுபடு திருவி னனைமகி ழானே. |
துறை
- பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு. வண்ணமும்
தூக்கும் அது. பெயர் - நாண்மகி ழிருக்கை (13)
(ப
- ரை) விரியுளை
சூட்டி (2) என்றதனாற் பயன்
மாவிற்குப்போர் வேட்கை பிறத்தல்.
சூட்டிக் (2)
கடந்த (3) என முடிக்க.
4. காஞ்சி சான்ற
வயவரென்றது நிலையாமை எப்பொழுதும்
உள்ளத்திற் கொண்டிருத்தலமைந்த வீரரென்றவாறு.
6. வனைந்து வரலென்பது
ஒரு வாய்பாட்டு விகற்பம்.
13. அவன் ஓலக்க
இருக்கையின் செல்வத்தை
நாண்மகிழிருக்கை யெனக் கூறிய சொற்சிறப்பானே இதற்கு
'நாண்மகி ழிருக்கை' என்று பெயராயிற்று.
14. தீந்தொடை
- 1பாலைக் கோவைகளாகிய வீக்குநிலை.
பையுளுறுப்பிற்
பண்ணுப் பெயர்த்தாங்கு (15) அளிக்கும் (6)
நனை (17) எனக் கூட்டி எல்லாப் பண்களிலும் வருத்தத்தைச் செய்யும்
உறுப்பினையுடைய பாலைப்பண்கள் பலவற்றையும் ஒரோவொன்றாகப்
பெயர்த்து வாசிக்குமாறுபோலே ஒன்றையொன்று ஒவ்வாத இன்பத்தை
உண்டவர்க்குக் கொடுக்கும் பலதிறத்து மதுவென வுரைக்க.
17. நனையென்றது
ஈண்டு மதுவிற்கெல்லாம் பொதுப் பெயராய்
நின்றது.
16. மாரியினென்னும்
உவமம் மதுக்களில் ஓரோவொன்றைக்
மிகுதிக்கு உவமம்.
17. சாறுபடு திருவினென்ற
உவமம் அம்மதுக்களைப் பானம்பண்
ணுங்காலத்து அலங்காரமாகக் கூட்டும் 2பூவும் விரையுமுதலாய
பொருள்களுக்கு உவமம். சாறென்றது விழாவின் தன்மையை.
மகிழென்றது மகிழ்ச்சியையுடைய ஓலக்கவிருப்பினை.
வயவர் பெரும
(14) வில்லோர் மெய்ம்மறை, சேர்ந்தோர்
செல்வ (5), சேயிழை கணவ (10), பாணர் புரவல, பரிசிலர் வெறுக்கை
(11), புகழ் சான்மார்ப, நின் (12) நாண்மகிழிருக்கையின் சிறப்பெல்லாம்
(13) நின் நனைமகிழின்கண்ணே (17) இனிது கண்டேம் (12) எனக்
கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற் சொல்லியது
அவன் ஓலக்க வினோதத்தொடு படுத்து
அவன் செல்வச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1 - 4. சேரன் பகைவரை வென்றமை
கூறப்படும்.
1-2. வெட்டப்பட்ட
பிணங்களை இடறுதலால் உண்டான
இரத்தத்தாற் சிவந்த கறையையுடைய குளம்பினையும், விரைந்த
செலவையும் உடைய நல்ல குதிரைக்கு விரிந்த தலையாட்டத்தைச்
சூட்டி.
உளையைச் சூட்டியது
குதிரைக்குப் போரில் வேட்கை பிறத்தற்
பொருட்டு. மறுக்குளம்பு: புறநா. 97 : 11
- 3, 98 : 5 - 7.
4. மு.
பதிற். 90 : 39.
3-4. நின்னோடு
மாறுபட்ட பகைவரது வீரம் கெடும்படி
வஞ்சியாது எதிர்நின்று வென்ற, நிலையாமை எப்போதும் தம்
நெஞ்சில் நிலைபெற்ற வீரருக்குத் தலைவ.
5. விற்படையாளருக்குக்
கவசம்போல்வாய், நின்னை
அடைந்தோருடைய செல்வமாக இருப்பாய். இல்லோரெனப் பிரித்துப்
பொருளில்லாதவரெனக் கொள்ளலுமாம்.
6-10.
சேரன் பெருந்தேவியின் சிறப்பு.
முத்தாரம் முதலியவற்றை
அணிந்து அழகுப்பெற்ற,
எழுதப்பட்டாற் போன்று வருதலையுடைய இளைய நகிலையும்,
மாட்சிமைப்பட்ட வரிகளையுடைய அல்குலையும், மலர்ந்த
கண்களையும், மூங்கிலை ஒத்து அழகுபெற்ற விளங்கிய
மூட்டுக்களையுடைய பெருத்த தோள்களையும், விரும்பத்தக்க
அருந்ததியையும் வென்ற கற்பினையும், நெடுந்தூரத்தே மணம்
கமழ்கின்ற நல்ல நெற்றியையும் உடைய சிவந்த ஆபரணங்களை
அணிந்தோளுக்குக் கணவ. சேயிழை கணவ என்றது அவள்
கற்பின் சிறப்பு நோக்கி; 'ஐயைதந்தை: ஐயை: ஒரு கற்புடைய
மகள்; இவள் தந்தையென்றது இவள் கற்புடைமை நோக்கி'
(அகநா. 6 : 3, உரை)
சேயிழை கணவ:
பதிற். 14 : 15, உரை.
11. பாணரது குடும்பத்தைப்
புரந்தலைவல்லாய்; "யாணர்க்
கோளூரென்ப, பாணர்ப் பாரந் தாங்கியோன் பதியோ"(யா
-
வி.16,மேற்); பரிசிலரது செல்வமாயிருப்பாய் (பதிற்.
15 : 21. 38 : 9)
12. அணிந்தென்னும்
முதல்வினை சினைவினை கொண்டது
(தொல். வினை. 34, ந.)
12-3. ஏழு முடியாற்
செய்த ஆரம் முதலிய ஆபரணங்களை
அணிந்து விளக்கமுற்ற புகழ்மிக்க மார்பையுடையாய், நின்னுடைய
நாளோலக்கத்தின் செல்வச் சிறப்பை இனிமையாகக் கண்டோம்.
14-7. இனிய
நரம்புக்கட்டையுடைய பாலையாழை வாசித்தலில்
வல்லோன் பண்கள் எல்லாவற்றுள்ளும் துன்பத்தைச் செய்யும்
உறுப்பையுடைய பாலைப் பண்களை மாறிமாறி வாசித்தாற்போல,
சேற்றைச் செய்கின்ற மழையைப் போல அளிக்கும் விழாவின் தன்மை
யுண்டான செல்வத்தைப் போன்ற மதுவால் மகிழ்ச்சியையுடைய ஓலக்க
விருப்பின் கண்ணே.
பாலைப்பண் வெவ்வேறான
சுவையையுடைய மதுவிற்கு
உவமை; "நல்லியாழ்ப், பண்ணுப் பெயர்த்தன்ன காவும், பள்ளியும்"
(மலைபடு. 450 - 51) என்பதும்,
'பண் ஒன்றையொன்று ஒவ்வாது
இனிதாயிருக்குமாறுபோல நுகரும் பொருள்களும் ஒன்றையொன்று
ஒவ்வா இனிமையுடைய என்றார்" (ந.) என்னும்
அதனுரையும்
இங்கே அறிதற்பாலன.
மகிழுக்கு மாரி;
"பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்,
வாக்கவுக்க தேக்கட் டேறல், கல்லலைத் தொழுகு மன்னே"
(புறநா. 115 : 2 - 4) (5)
1பாலைக்
கோவைகளென்றது செம்பாலை முதலிய
எழுவகைப்பாலைப் பண்களை.
2பதிற்.
42. 10-11, உரை
|