69.
|
மலையுறழ்
யானை வான்றோய் வெல்கொடி
வரைமிசை யருவியில் வயின்வயி னுடங்கக்
கடல்போற் றானைக் கடுங்குரன் முரசம்
காலுறு கடலிற் கடிய வுரற |
5
|
எறிந்துசிதைந்த
வாள்
இலைதெரிந்த வேல்
பாய்ந்தாய்ந்த மா
ஆய்ந்துதெரிந்த புகன்மறவரொடு
படுபிணம் பிறங்க நூறிப் பகைவர் |
10
|
கெடுகுடி
பயிற்றிய கொற்ற வேந்தே
நின்போல். அசைவில் கொள்கைய ராகலி னசையா
தாண்டோர் மன்றவிம் மண்கெழு ஞாலம்
நிலம்பயம் பொழியச் சுடர்சினந் தணியப்
பயங்கெழு வெள்ளி யாநிய நிற்ப |
15
|
விசும்புமெய்
யகலப் பெயல்புர வெதிர
நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த
இலங்குகதிர்த் திகிரி முந்திசி னோரே. |
துறை
- வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கும்
வஞ்சித் தூக்கும். பெயர் - மண்கெழு ஞாலம். (12)
(ப
- ரை) நுடங்க
(2) எனவும் உரற (4) எனவும் நின்ற
வினையெச்சங்களை நூறி (9) என்னும் வினையொடு முடிக்க.
புகன்மறவரொடு
என்னும் ஒடுவை (8) வாளொடு (5) வேலொடு
(6) மாவொடு (7) என எங்கும் கூட்டுக.
வாள்.
வேல். மாவென நின்ற மூன்றும் ஆகுபெயர்.
9.
நூறியென்பது ஈண்டுக் கொன்றென்னும் பொருண்மைத்து.
9-10.
பகைவர் கெடுகுடி பயிற்றியவென்றது படுபிணம் பிறங்கப்
பகைவரை நூறியப்பின் அப்பகைவருடைய கெட்டுப்போன
குடிமக்களை அவர் நாட்டிலே பயின்று வாழ்வாராகப் பண்ணிய
வென்றவாறு.
இனிப்
பகைவருடைய கெட்ட குடிகளை வேற்றுநாட்டிலே
பயிலப் பண்ணின வென்றுமாம். மன்ற என்பதனை (12) அசைவில்
கொள்கை யராகலின் (11) என்பதனொடு கூட்டுக.
12.
1பொன்ஞாலமன்றி இம் மண்ஞாலமுழுதும் ஆண்டாரென்பது
தோன்ற மண்கெழு ஞாலமென்ற இச்சிறப்பலானே இதற்கு. “மண்
கெழு ஞாலம்” என்று பெயராயிற்று.
13.
நிலம் பயம் பொழியவென்றது சிலர் அரசு
செய்யுங்காலங்களில் மழையும் நீரும் குறைவின்றியிருந்தும்
எவ்விளைவும் சுருங்கவிளையும் காலமும் உளவாம்; அவ்வாறன்றி
நிலம் பயனைப் பொழிந்தாற்போல மிக விளையவென்றவாறு.
சுடர்
சினம் தணியவென்றது 2திங்கள் மும்மாரியும் பெய்து
மழை இடையறாது வருகின்றமையின் சுடர் சினந் தணிந்தாற்போன்று
தோற்றவென்றவாறு.
14.
வெள்ளியென்றது வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி (பதிற்..
24 : 24) என்றவாறு.
பயம்கெழு
ஆநியம் நிற்கவென்றது அவ்வெள்ளி மழைக்கு
3உடலான மற்றைநாள் கோள்களுக்குச் செல்கின்ற நல்ல நாட்களிலே
நிற்க வென்றவாறு. 15. விசும்புமெய் அகலவென்றது
அம்மழையில்லாமைக்கு உற்பாதமாகிய 4தூமத்தோற்றமின்மையான்.
ஆகாயவெளி தன்வடிவு பண்டையில் அகன்றாற்
போலத்தோன்றவென்றவாறு.
பெயல்
புரவு எதிரவென்றது மழை இவ்வுலகினை யானே
புரப்பேனென்று 5ஏறட்டுக்கொண்டாற்போல நிற்பவென்றவாறு.
16.
நால்வேறு நனந்தலை ஓராங்கு தந்தவென்றது நாலுதிசையும்
ஒன்று போலே பகையின்றி விளங்கவென்றவாறு.
கொற்றவேந்தே
(10) இலங்குகதிர்த் திகிரியினையுடைய நின்
முன்னோர் (17) நிச்சயமாக (12) நின்னைப்போல் அசைவில்லாத
மேற்கோளை யுடையராகையாலே (11) இம்மண்ஞாலத்தினை (12) நிலம்
பயம் பொழிதல் முதலாக (13) நால்வேறு நனந்தலை ஓராங்கு நந்தல்
(16) என்பது ஈறாக எண்ணப்பட்ட நின் புகழெல்லாம் உளவாக
அசைவின்றி (11) ஆண்டோராவர் (12); அவரல்லார்
இம்மண்ஞாலத்தின் ஒரோவிடங்களை ஆளுவ தல்லது 6முழுதும்
ஆளுதல் கூடாதென்றேயெனக் கூட்டிவினை முடிவு செய்க.
11.
'ஆண்டோரசையாது' என்பது பாடமாக்கி அதற்கேற்ப
உரைப்பாரும் உளர்.
இதனாற்
சொல்லியது அவன் ஆள்வினைச்சிறப்பினை அவன்
குடிவரலாற்றோடு படுத்துச் சொல்லியவாறாயிற்று.
'எறிந்துசிதைந்த'
(5) என்பது முதலாக, 'மறவரொடு' (8) என்பது
ஈறாக நான்கடி வஞ்சியடியாய் வந்தமையான் வங்சித்தூக்குமாயிற்று.
அவற்றுள் முன்னின்ற 7மூன்றடிகளின் ஈற்றுச்சீர்கள் அசைச்
சீர்களாகவும் 8மற்றையடியின் ஈற்றுக்சீர் பொதுச்சீரகாவும் இட்டுக்
கொள்க.
'நின்போல்'
(1) என்றது கூன்.
(கு
- ரை) 1-2. மலையை ஒத்த யானையின் மேல் எடுத்த
வானத்தை அளாவிய வெற்றிக்கொடி, மலையின் மேலுள்ள
அருவியைப் போல இடந்தோறும் அசைய.
யானைக்கு
மலையும் அதன்மேலுள்ள கொடிக்கு அருவியும்
உவமை; "களிறணி வெல்கொடி கடுப்பக் காண்வர, ஒளிறுவன
விழிதரு முயர்ந்து தோன் றருவி", "பெருவரை யிழிதரு நெடுவள்
ளருவி, ஓடை யானை யுயர்மிசை யெடுத்த, ஆடுகொடி கடுப்பத்
தோன்றும்' (அகநா. 162 : 22 - 3, 358
: 12 - 4)
3-4.
கடல்போலப் பரந்த சேனையினிடத்தே கடிய
குரலையுடைய முரசங்கள் காற்றுப் பொருந்திய கடலைப்போலக்
கடுமையுடையனவாய் முழங்க (பதிற். 68 : 1
- 3)
யானைக்குக்
கடல்: "உரவுக்கடலன்ன தாங்கருந் தானையொடு"
(பதிற். 90 : 31)்; "கடன்மரு டானை, மட்டவிழ்
தெரியன் மறப்போர்க்
குட்டுன்" (அகநா, 212 : 15 : 6)
5-8.
பகைவரை வெட்டிச் சிதைந்த வாளையுடைய வீரரோடு,
இலை வடிவம் ஆராய்ந்து அமைக்கப்பட்ட வேலையுடைய வீரரோடு,
பகைவர்மீது பாய்ந்து வன்மை குறைந்த குதிரை வீரரோடு ஆராய்ந்து
தெரியப்பட்ட போரை விரும்புதலையுடைய மற்ற வீரரோடு.
மறவரொடு
என்னும் ஒடுவை வாள், வேல்,
மாவென்பவற்றோடும் கூட்டுக. வாள் முதலிய மூன்றும்
அவற்றையுடைய வீரரைக் குறித்தலின் ஆகுபெயர்.
9-10.
இறந்த பிணம் உயரும்படி கொன்று பகைவருடைய
கெட்ட குடிகளை மீண்டும் அவர் நாட்டிலே வாழப்பண்ணிய
வேந்தே.
நுடங்க
(2) உரறப் (4) பிறங்க நூறிப் (9) பயிற்றிய (10) என
முடிக்க.
11-2,
நின்னைப்போலத் தெளிவாக மாறுதல் இல்லாத
கொள்கை யுடையராதலால், நடுக்கமில்லாமல் இந்த அணுச்செறிந்த
மண்ணுலகத்தை ஆண்டனர்.
ஆண்டோர்
(12) முந்திசினோர் (17) என்பதனோடு முடியும்.
13-6.
முன்னோர் ஆட்சியின் சிறப்பு.
13.
நிலம் பயனைப் பொழிந்தாற்போல மிக விளைய, காலத்தே
தவறாமல் மழை பெய்தலால் சூரியன் வெப்பந் தணிந்தாற்போன்று
விளங்க.
14,
உலகத்திற்குப் பயன்பொருந்திய சுக்கிரனென்னும் கோள்
மழைக்குக்காரணமான மற்ற நாள் கோள்களுக்குச் செல்கின்ற நல்ல
நாட்களிலே நிற்க (பதிற், 13 : 25)
15.
தூமகேது முதலியன இல்லாமையால் ஆகாயம் தன் வடிவம்
அகன்றாற்போல விளங்க. மழை உலகத்தைத்தானே காத்தலை மேற்
கொண்டாற்போல விளங்க; "நிலனு மரனும் பயனெதிர்பு நந்த"
(மதுரைக், 12)
16.
நான்காகிய வேறுபட்ட அகன்ற திசைகளும் ஒன்றுபோலப்
பகையின்றி விளங்க. 17. விளங்குகின்ற கிரணத்தையுடைய
ஆஞ்ஞாசக்கரத்தையுடைய நின் முன்னோர்.
முந்திசினோர்
(17) பொழியத் தணிய (13) நிற்ப (14) அகல
எதிர (15) நந்த (16) ஆண்டோர் (12) என முடிவு செய்க.
மு.
இது முன்னுள்ளோர்க்கும் இயல்பென்பது படக்கூறிய
இயன் மொழி வாழ்த்து (தொல். புறத். 35.
ந.)
(பி
- ம்) 3. கடல்போறானைக் (9)
1பொன்ஞாலம்
- தேவருலகம்.
2"முடிபுனைந்தசீர்
மன்னவர் நெறியினான் முன்னவர் தவத்தாற்
பைந். தொடிம டந்தையர் கற்பினான் மதிதொறுஞ் சொரிதரு மும்மாரி
(குற்றாலப்.
திருநாட்டுச். 39); "திங்கண் மும்மாரி பெய்க" (சீவக.
நூலிறுதிச் செய்யுள்)
3உடல்
- ஆதாரம்.
4"மைம்மீன்
புகையினுந் தூமந்தோன்றினும்" (புறநா.
117 : 1);
"கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்`` (சிலப்.
10 : 102)
5"மரங்களும்
பல்லுயிர்க்கும் தன் பயன் கொடுத்தலை
ஏறட்டுக் கொண்டு தழைப்ப’
(மதுரைக்.
12. ந.)
6இது.
"வையங் காவலர் வழிமொழிந் தொழுகப். போகம்
வேண்டிப் பொதுச்சொற் பொறாஅ திடஞ்சிறி தென்னு மூக்கந்
துரப்ப. ஒடுங்காவுள்ளத் தோம்பா வீகைக். கடந்தடு தானைச்
சேர லாதனை" (புறநா.
8 : 1 - 5) என்பது நினைப்பிக்கின்றது.
7மூன்றடிகளென்றது
5 - 7-ஆம் அடிகளை.
88-ஆம்
அடி.
|