முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை

        நான்காம் பத்து பதிகம்

ஆராத் திருவிற் சேர லாதற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் றேவி யீன்ற மகன்முனை
பனிப்பப் பிறந்து பல்புகழ் வளர்த்
  5 தூழி னாகிய வுயர்பெருஞ் சிறப்பிற்
பூழி நாட்டைப் படையெடுத்துத் தழீஇ
உருள் பூங் கடம்பின் பெருவாயி னன்னனை
நிலைச்செருவி னாற்றலை யறுத்தவன்
பொன்படு வாகை முழுமுத றடிந்து
  10 குருதிச் செம்புனல் குஞ்சர மீர்ப்பச்
செருப்பல செய்து செங்களம் வேட்டுத்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றிக்

      களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்துப்பாட்டு.

     அவைதாம்: கமழ்குரற்றுழாய், கழையமல்கழனி, வரம்பில்
வெள்ளம், ஒண்பொறிக்கழற்கால், மெய்யாடுபறந்தலை, வாண்மயங்கு கடுந்தார், வலம்படுவென்றி, பரிசிலர்வெறுக்கை, ஏவல் வியன்பணை, நாடுகாணவிர்சுடர். இவை பாட்டின் பதிகம்.

     பாடிப்பெற்ற பரிசில்: நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கு
கொடுத்துத் தான் ஆள்வதிற் பாகங்கொடுத்தான் அக்கோ.

     களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் இருபத்தையாண்டு
வீற்றிருதான்.

     (கு - ரை) 1. ஆராத்திருவின் - நுகர நுகர விருப்பம்
அமையாத செல்வத்தையுடைய.

     3-4. முனைபனிப்பப் பிறந்து - பகைவர் போர்முனைகள்
நடுங்கும்படி பிறந்து.

     5. ஊழின் ஆகிய - முறைமையினால் உண்டான.

     6. பூழிநாடு: கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று;
இதனை வென்றமையால் சேரர், "பூழியர் மெய்ம்மறை" (பதிற்.
73 : 11, 90 : 27), "பூழியர் கோ"
திற். (21 : 23, 84 : 6) என்று
கூறப்படுவர்.தழீஇ - தன் நாட்டோடு சேர்த்துக்கொண்டு.

     7. உருள் பூங்கடம்பு - தேருருள் போன்ற பூவையுடைய கடம்பு
(முருகு, 11, ந.; பரி. 5 : 81, 21 : 11, 50)

     7-8. "குடாஅ, திரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவிற்
பொலம்பூ ணன்னன் பொருதுகளத் தொழிய, வலம்படு கொற்றந் தந்த
வாய்வாட், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்" (199 : 18 - 22)
என அகநானூறு வாகைப்பறந்தலையில் வென்றதாகக் கூறும்.

     9. வாகை நன்னனது காவல்மரம் (பதிற். 40 : 14 - 5)

     10. இரத்தமாகிய செந்நிறத்தையுடைய புனல் யானைகளை
இழுத்துச் செல்ல.

     11. செங்களம் வேட்டு - இரத்தத்தாற் சிவந்த போர்க்களத்தில்
களவேள்வியைச் செய்து; களம் வேட்டல்: முருகு. 99 - 100; மதுரைக்
128 - 30; புறநா. 26 : 6 - 11; பு. வெ. 160.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

ஆசிரியர் காப்பியாற்றுக் காப்பியனார் பாடிய 

நான்காம் பத்து

பதிகம்
 

ஆராத் திருவின் சேரலா தற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் தேவி யீன்ற மகன்முனை
பனிப்பப் பிறந்து பல்புகழ் வளர்த்
தூழி னாகிய வுயர்பெருஞ் சிறப்பிற்
பூழி நாட்டைப் படையெடுத்துத் தழீஇ
உருள்பூங் கடம்பின் பெருவாயி னன்னனை
நிலைச்செருவி னாற்றலை யறுத்தவன்
பொன்படு வாகை முழுமுதல் தடிந்த
குருதிப் செம்புனல் குஞ்சர மீர்ப்பச்
செருப்பல செய்து செங்களம் வேட்டுத்
துளங்குகுடி திருத்திய வளம்படு வென்றிக்
 
  

களங்காய்க்     கண்ணி  நார்முடிச்  சேரலைக்    காப்பியாற்றுக்
காப்பியனார்  பாடினார்  பத்துப்பாட்டு. அவைதாம், கமழ்குரற் றுழாய்,
கழையமல்   கழனி,   வரம்பில்  வெள்ளம்,  ஒண்பொறிக்  கழற்கால்,
மெய்யாடு  பறந்தலை,  வாள்  மயங்கு  கடுந்தார்,  வலம்படு வென்றி,
பரிசிலர்  வெறுக்கை,  ஏவல் வியன்பணை, நாடுகா ணவிர்சுடர். இவை
பாட்டின் பதிகம்.  

பாடிப்   பெற்ற   பரிசில்   :  நாற்பது     நூறாயிரம்    பொன
ஒருங்கு கொடுத்துத் தான் ஆள்வதிற் பாகங் கொடுத்தான் அக்  கோ.  

களங்காய்க்  கண்ணி  நார்முடிச்    சேரல்     இருபத்தையாண்டு
வீற்றிருந்தான்.  


 மேல்மூலம்