முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
          எட்டாம் பத்து பதிகம்

 



பொய்யில் செல்வக் கடுங்கோ வுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் றேவியீன்றமகன்
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப்
பல்வேற் றானை யதிக மானோ
 5




டிருபெரு வேந்தரையு முடனிலை வென்று
முரசுங் குடையுங் கலனுங்கொண்
டுரைசால் சிறப்பி னடுகளம் வேட்டுத்
துகடீர் மகளி ரிரங்கத் துப்பறுத்துத்
தகடூ ரெறிந்து நொச்சிதந் தெய்திய
 10
அருந்திற லொள்ளிசைப் பெருஞ்சேர லிரும்பொறையை

     1மறுவில் வாய்மொழி யரிசில்கிழார் பாடினார் பத்துப்பாட்டு.

     அவைதாம்: குறுந்தாண்ஞாயில், உருத்தெழு வெள்ளம்,
நிறந்திகழ் பாசிழை! நலம்பெறுதிருமணி! தீஞ்சேற்றியாணர்,
மாசிதறிருக்கை வென்றாடுதுணங்கை, பிறழநோக்கியவர்,
நிறம்படுகுருதி! புண்ணுடை யெறுழ்த் தோள். இவை பாட்டின்
பதிகம்.

     பாடிப்பெற்ற பரிசில்: தானும் 2கோயிலாளும் புறம்போந்து
நின்று கோயிலுள்ள வெல்லாம் கொண்மினென்று காணம் ஒன்பது
நூறாயிரத்தோடு 3அரசுகட்டிற் கொடுப்ப அவர் யான் இரப்ப
இதனை ஆள்கவென்று அமைச்சுப் பூண்டார்.

     4தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை பதினேழியாண்டு
வீற்றிருந்தான்.

     (கு - ரை) பொய்யில் செல்வம் - இரவலர்க்குப்
பொய்த்தலறியாத செல்வத்தையுடைய.

     3. கொல்லிமலையைச் சூழ்ந்த மலைகளையுடைய நாட்டினது
நீர்மிக்க மலையின் உச்சியில்.

     4. பல வேற்படைகளையுடைய அதிகமானென்னும்
தலைவனோடு; “உரவுச்சினங் கனலு மொளிதிகழ் நெடுவேல்,
அரவக்கடற் றானை யதிகனும்” (சிறுபாண். 102 - 3). 5. சோழன்,
பாண்டியன் என்னும் இரண்டு பெரிய அரசர்களையும் சேர வென்று.

     6. முரசையும், குடையையும், கீரிடத்தையும் கைக்கொண்டு;
“அரைசுபட வமருழக்கி, உரைசெல முரசுவௌவி” (புறநா. 26 : 6-7)

     7. புகழ் மிக்க சிறப்பினையுடைய அட்ட களத்தில்
வேள்வியைச் செய்து; “புலவுக்களம் பொலிய வேட்டோய்”
(புறநா. 372 : 12)

     8. குற்றம் நீங்கிய அதிகமானுடைய உரிமை மகளிர்
இரங்கும்படி வன்மையைக் கெடுத்து. 9. தகடூரை அழித்து அதன்
மதிலைக் கைக் கொண்ட; தகடூரை அழித்தது: பதிற். 78 : 9.


     1மறு இல் வாய்மொழி - குற்றமில்லாத உண்மையான
மொழியையுடைய.

     2கோயிலாள் - பெருஞ்சேரலிரும் பொறையின் பெருந்தேவி.
     3அரசு கட்டில் - சிங்காதனம்.
     4புறநா. 50, கருத்து.




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

ஆசிரியர் அரிசில்கிழார் பாடிய

எட்டாம் பத்து

பதிகம்

பொய்யில் செல்வக் கடுங்கோ வுக்கு
வேளாவிக் கோமான் பதுமன்றேவி யீன்றமகன்
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப்
பல்வேற் றானை யதிக மானோ
டிருபெரு வேந்தரையு முடனிலை வென்று
முரசுங் குடையுங் கலனுங் கொண்
டுரைசால் சிறப்பி னடுகளம் வேட்டுத்
துகடீர் மகளி ரிரங்கத் துப்பறுத்துத்
தகடூ ரெறிந்து நொச்சிதந் தெய்திய
அருந்திறலொள்ளிசைப் பெருங்சேரலிரும் பொறையை

  

மறுவில்     வாய்மொழி  அரிசில்கிழார்  பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்,  குறுந்தாண்  ஞாயில்,  உருத்தெழு வெள்ளம், நிறந்திகழ்
பாசிழை,  நலம்பெறு  திருமணி,  தீஞ்சேற் றியாணர், மாசித றிருக்கை,
வென்றாடு   துணங்கை   .   பிறழ  நோக்கியவர்,  நிறம்படு  குருதி,
புண்ணுடை யெறுழ்த்தோள் . இவை பாட்டின் பதிகம்.

பாடிப்  பெற்ற பரிசில் : தானும் கோயிலாளும் புறம்போந்து நின்ற
கோயிலுள்ளவெல்லாம்    கொண்மின்    என்று   காணம்   ஒன்பது
நூறாயிரத்தோடு  அரசு கட்டிற்கொடுப்ப, அவர் யான் இரப்ப இதனை
யாள்க என்று அமைச்சுப் பூண்டார்.

தகடூரெறிந்த    பெருஞ்சேர   லிரும்பொறை    பதினேழியாண்டு
வீ்ற்றிருந்தான்.


 மேல்மூலம்