பக்கம் எண் :

218

அசும்பு மருவி யருவிடர்ப் பரந்த
பசும்பூட் சேஎய்நின் குன்றநன் குடைத்து;
கண்ணொளிர் திகழட ரிடுசுடர்
படர்கொடி மின்னுப்போல்
55ஒண்ணகை தகைவகை நெறிபெற
விடையிடை யிழைத்தியாத்த
செண்ணிகைக் கோதை கதுப்போ டியல
மணிமரு டேன்மகிழ் தட்ப வொல்கிப்
பிணிநெகிழப் பைந்துகி னோக்கஞ் சிவப்பூரப்
பூங்கொடி போல நுடங்குவா ளாங்குத்தன்
60சீர்தகு கேள்வ னுருட்டுந் துடிச்சீராற்
கோடணிந்த முத்தார மொல்க வொசிபவளேர்
ஆடை யசைய வணியசையத் தானசையும்
வாடை யுளர்கொம்பர் போன்ம்;
வாளி புரள்பவை போலுந் துடிச்சீர்க்குத்
65தோளூழ் பெயர்ப்பவள் கண்;
மாறம ரட்டவை மறவேல் பெயர்ப்பவை

52-3. இடையறாது ஒழுகும் அருவி அரிய விடரின்கண்ணே பரந்த நின்குன்றம் உடைத்து.

47 - 53. பலவகை நறுநாற்றமுடைமை கூறினவாறு.

54 - 6. இடுசுடர் பரந்த கொடிமின்னுப்போற் கண்ணிற்கு ஒளிர்ந்த திகழாநின்ற அடராலே ஒண்... .........அழகும் நெறிப்பும் இடையிடை பெறச்செய்து யாத்த தொழிலையுடைய.

மின்னுப்போற் கோதையென இயையும்...............

54. ஒளிர்திகழ் : வினைத்தொகையடுக்கு.

56. அக்கோதை கதுப்போடசைய.

57 - 8. மாணிக்கத்தை யொக்கச்சிவந்த.....கள்ளை நுகர்ந்த மகிழ்ச்சி தடுப்பப் பசுமையையுடைய துகிலுடை நெகிழ.

57-63. கள்ளுணர்.........ராக்க நுடங்குவாளாய்த் துடிச்சீரின் கண்ணே முலைக்கண் அணிந்த முத்தாரமசைய ஆடுவாளது அழகு வாடையாலுளரப்பட்டு ஆடையசையவும் அணியசையவும் அசையுங்கொம்பர் உண்டாயின் அதனழகையொக்கும். 59. ஆங்கு : அசை.

64 - 5. சீர்க்கு இசையத் தோளைப் பெயர்ப்பவள் கண் அம்பு புடை பெயர்வன போலும்.

என்று இவ்வாற்றான் மலைச்சிறப்புக் கூறி மேல் வாழ்த்தி முடிக்கின்றார்:-

66. மாற்றாரை அமரின்கட்கொன்ற படையை.