எல்லாப் பொருளும் நீயே என்பது இப்
பகுதியின் கருத்தாகக் கொள்க.
இக் கருத்தினை,
"திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசை
படர்பொருள் முழுவதுமாய் அவையவை தொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன்"
(திருவாய்மொழி - 1: 7)
எனவும்,
"அரன் அயன் என உலகழித்து அமைத்துளனே"
(திருவாய் - 1: 8)
எனவும் வரும், நம்மாழ்வார் கருத்தோடு ஒப்பிட்டுணர்க.
[குறிப்பு: இவ் வுரை பெரும்பாலும் பரிபாடலுக்குப்
பரிமேலழகர்
எழுதியுள்ள பழைய உரையின் கருத்தினைத் தழுவியே எழுதப்படுகின்றது.
பரிமேலழகர் உரையிற் காணப்படும் இன்றியமையாத குறிப்புக்களையும்
ஆங்காங்கே விளக்கவுரையின் கீழே (பரிமே.) என்னும் அடையாளத்தின்
பின் எடுத்துக் கூறப்படும்.]
(பரிமே.) 44. மடங்கல் - அவனினாகிய உலகுயிர்களினது
ஒடுக்கம்.
47. மாகமாகிய விசும்பும்; மாகமாவது பூமிக்கும் சுவர்க்கத்துக்கும் நடுவ.......
49 - 54: அதனால்.............................................................பொலிந்தே
(இ - ள்.) அதனால்-இவ்வாறு எப்பொருளும் அவற்றின்
பண்புகளும் தொழிலும் நீயேயாக இருத்தலாலே, இன்னோர் அனையை
இனையை என -நீ இன்னவரை ஒப்பாவை இத்தகைய பண்பும் தொழிலும்
உடையை என்று உவமங்காட்டிக் கூறுதற்கு, அன்னோர் யாம் இவண்
காணாமையின் - நினக்கு உவமமாகுந் தகுதியுடையாரை யாங்கள்
இவ்வுலகின்கண் காண மாட்டாமையானும், பொன் அணி நேமி
வலங்கொண்டு ஏந்திய மன்னுயிர் முதல்வன் - மேலும் நீ பொன்னின்
அழகினைக்கொண்ட சக்கரப்படையினை எல்லா வுலகினையும்
ஆள்வதற்கு அடையாளமாக வலப்பக்கத்தே ஏந்திய நிலைபெற்ற
உயிர்கட்குத் தலைவனும் ஆக இருத்தலானும், நின்
புகழொடு பொலிந்து நின்னோரனையை - நீ நினது புகழோடே
விளங்கி நின்னையே ஒத்தவனாக இருக்கின்றாய் என்பேன்;
(வி - ம்.) இன்னோர் - இன்னவர். இனையை -
இவ் வியல்புகளை உடையை. அன்னோர் - உவமங் கூறத்தக்கவர்.
காணாமையானும் முதல்வனாகலானும் என ஈரிடத்தும் உம்மை
விரித்துக் கூறுக. உவமங்காணாமையானும் உயிர்த்தலைவர்
நின்னையன்றிப் பிறரின்மையானும் |
|
|
|