தொகுபுனல் - வெள்ளம். அவற்றை
ஓம்புதற்பொருட்டு முழக்கிய துடி
என்க. தூம்பு - துளை. துளித்தற்குரிய சிறுதுளை அற்று ஓட்டையாயிற்றுப்
போலும் என்பாரும் என்க. ஓதம் - கடல். கடலே பெருகிவந்து ஊரை
வளைந்ததோ என்று மருளும் படியும் என்க.
(பரிமே.) 25. எழுதிய - புனைந்த.
25-6. பாவைமேற் காதலையுடைய மடவார் அழ என்க.
30. வானின் மழை தூம்பற்ற தென.
31 - 29: பாடுவார் . . . . . . . . பரத்தந்து
(இ-ள்.) பாடுவார் பக்கம் கொண்டென - ஒரு பக்கத்தே
பாணர்கள் குடியிருந்த பாக்கத்தை வெள்ளம் கவர்ந்து கொண்டதென்று
பூசலிடவும், ஆடுவார் சேரி அடைந்தென - ஒரு பக்கத்தே கூத்தர்
குடியிருந்த சேரியை வெள்ளம் சுற்றியது என்று பூசலிடவும், கழனி கால்
வந்து கோத்தென - வயல்களை வெள்ளக்கால் வந்து கொண்டது என்று
ஒருசார் ஆரவாரிப்பவும், பழன வாளை பாளை உண்டென - ஒருசார்
வெள்ளம் கமுகு தெங்குகளின் கழுத்தை முட்டப் பெருகியதனால்
வயல்களிடத்தே வாழும் வாளைமீன் அவற்றின் பாளையைத் தின்னா
நின்றன என்று வியப்பவும், வித்திடு புலம் மேடு ஆயிற்று என - ஒருசார்
உழவர் தமது நாற்றங்கால் வெள்ளத்தாலே வண்டலிடப்பட்டு மேடாயிற்று
என்று வருந்தாநிற்பவும் உணர்த்த உணரா ஒள் இழை மாதரைப்
புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின் துனைந்து - ஊடலைத் தான்
உணர்த்த உணராத மகளிரைக் கூட்டுவித்தற்கு முயலும் கணவனது
ஆசைவெள்ளம்போலப் பெருகி விரைந்து. பாய் புனல் - பாயாநின்ற
நீரின்கண்ணே, பழன உழவர் சினைவளர் வாளையின் கிளையொடு
கெழீஇப் பரத்தந்து - வயல் உழுதொழிலையுடைய வேளாண்மாந்தர்
கருமுதிர்ந்த வாளை மீன் போன்று விலாப்பருக்க உண்டு தம்
சுற்றத்தாரோடும் கூடித் தம் தொழிலைச் செய்யும் பொருட்டுப்
பரவிச்செல்லா நிற்பவும்;
(வி-ம்.) பாடுவார் - பாணர். பாக்கம் - பக்கத்தே
உள்ள ஊர்.
ஆடுவார் - கூத்தர். கால் - வெள்ளக்கால். கால்வந்து என மாறுக.
பழனம் - வயல் தெங்கு முதலியவற்றின் கழுத்துமுட்ட வெள்ளம்
உயர்தலாலே அவற்றின் பாளையை வாளை உண்ணாநின்றன என்க.
வித்திடுபுலம் - விதை வித்துதற்குரிய வயல்; அஃதாவது நாற்றங்கால்.
வண்டலிடுதலாலே மேடாயிற்று என்க. புணர்த்திய - புணர்த்த; செய்யிய
என்னும் வாய்பாட்டெச்சம். இச்சம் - இச்சை; ஆசை. இச்சத்துப்
பெருக்கம் - ஆசையாகிய வெள்ளம்; அத்துச் சாரியை அல்வழிக்கண்
வந்தது. |
|
|
|