எட்டாம் பாடல்
----------
செவ்வேள்
பொருட் சுருக்கம்
(29) குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்! (17) முதல்வ!
1 - 11: திருமாலும், சிவபெருமானும், பிரமனும், ஆதித்தர்
பன்னிருவரும், அசுவனி மருத்துவர் இருவரும், வசுக்கள் எண்மரும்,
உருத்திரர் பதினொருவரும் திக்குப் பாலகர் எண்மரும்,
ஏனைத்தேவர்களும், அசுரரும், முனிவர்களும், நின்னைக் காண்டல்
காரணமாக மண்ணுலகின்கண் வந்து உறையும் இடமாக நின்றது;
ஆதலால் நினது திருப்பரங்குன்றம் இமயக் குன்றத்தை ஒக்கும்;
12-21: அப் பரங்குன்றத்தின்கண்ணுள்ள சுனை, நின்னையீன்ற
சரவணப்பூம் பொய்கையை ஒக்கும். அக்குன்றிலுள்ள முகில் முழக்கம்
நின் யானையினது முழக்கத்தை ஒக்கும். அம் முழக்கத்தைக் கேட்ட
நினது கோழிச் சேவல் கூவிற்று; யானைகள் பிளிறின; அதனால்
அம்மலை முழையின்கண் எதிரொலி எழுந்தது;
22 - 28: அத் திருப்பரங்குன்றத்திற்கும் மதுரைக்கும்
இடையே
கிடந்த வழியில் குழலும் யாழும்போல் வண்டுகள் இசைபாடின,
சுனைப்பூக்களும், கொன்றைமலரும், கொடிப்பூக்களும், காந்தட் பூக்களும்,
பிற பூக்களும் மலர்ந்து மணங்கமழ்ந்தன. இம்மணங்களை அளாவிக்கொண்டு
தென்றல் உலாவும் சிறப்புடையது அவ்வழி;
29 - 35: மதுரையின்கண்ணே முரசம் கடல்போன்றும்,
முகில்போன்றும்,
இடிபோன்றும் முழங்குந்தோறும் நினது பரங்குன்றத்தில்
அதற்கு மாறாக எதிரொலி எழுந்து முழங்கா நிற்கும்;
36 - 46: தலைவியரால் தூது விடுக்கப்பட்ட வண்டுகளின்
இசை,
அவருடைய காதற் சிறப்பை மதுரைநகரின்கண் புலப்படுத்தியது.
அத்தலைவியர்பால் தலைவர்கள் போந்தனர். அங்ஙனம் போந்த,
தலைவருள் ஒருவன், பரத்தையர் சேரியினின்றும் வந்தான்; அவன் தன்
தலைவியின் ஊடல் தவிர்க்கக் |
|
|
|