றனை, ஆண்டுப் பனிமலர்க் கண்ணாரோடு
ஆட - அவ்விடத்தே தீ
குளிர்ந்த மலர்போன்ற கண்ணினையுடைய அம் மகளிரோடு கூடி
ஆடும்பொருட்டே, காலைப் போய் மாலை வரவு - நாள் தோறும்
காலைப்பொழுதிலே பிரிந்துபோய் மாலைப்பொழுதிலே கண்டு வரும்
வருகை, நகைமலர் மாலைக்கு மாலை வரூஉம் - ஒளிமலரையுடைய
மாலைதோறும் நிகழாநின்றது, வரைசூள் நில் - இங்ஙனமாதலின் நீ
பண்டு நின்னிற் பிரியேன் பிரியின் உயிர் வாழேன் என வரைந்து கூறிச்
செய்த சூண்மொழியைத் தவிர் வாயாக என்று தலைவி கூறாநிற்ப;
(வி - ம்.) இனி - இப்பொழுது. ஏதிலர் - அயலோர்:
என்றது
பரத்தையரை. 'ஏதிலர் நாறுதி' என்றது, நீ பரத்தையரோடு ஆடி
வருதலாலே அவர் அணிந்த மணம் நின்மேல் கமழாநின்றது என்றவாறு.
பனி - குளிர். ஆட: இடக்கரடக்கு. நகைமலர் - ஒளியுடைய
மலர். மாலைக்கு மாலை - மாலைதோறும். வரூஉம் - நிகழும். வரைசூள்
- வரைந்துகூறும் சூள் என்க. நில் - தவிர்க என்னும் பொருட்டு.
(பரிமே.) 49. 'மாலைக்குமாலை' என்றது அடிக்கடி என்றாற்
போல நின்றது.
51 - 55: இனிமணல் . . . . . . . . நின்சூள்
(இ-ள்.) மலர் உண்கண் இனி மணல் வையை இரும்பொழிலும்
குன்றப் பனிமொழி சாரலும் பார்ப்பாரும் (......) அதுகேட்ட தலைவன்
தலைவியை நோக்கித் தாமரை மலரை ஒத்த மையுண்ட
கண்ணையுடையோய்! இனிய மணலையுடைய வையைக் கண் உள்ள
பெரிய பொழிலாணை திருப்பரங்குன்றத்தினது சாரலாணை
பார்ப்பாராணை, சொல்வேறு - நீ கூறிய சொல் எனக்குப் பொருந்தாத
வேறு சொல்லாயிற்று, துனியல் - இங்ஙனம் பொருந்தாத கூறி
வருந்தாதேகொள், நாற்றம் - என்மேற் கமழும் இம் மணம், கனியின்
மலரின் மலிர் கால் சீப்பின்னது - திருப்பரங்குன்றத்திலுள்ள கனியினும்
மலரினும் பயின்றுவந்த காற்று என்மேலும் அடித்தமையாலே
உண்டாகியது, நனி துனியல் - ஆதலால் நீ இவ்வாறு மிகவும் வருந்தாதே
கொள் என்றான், நின் சூள் (49) நில் - அதுகேட்ட தலைவி தலைவனை
நோக்கி ஏடா! நீ இவ்வாறு பொய்ச் சூளுறுதலைத் தவிர்வாயாக
என்றாள்;
(வி-ம்.) இனிமணல் - இனிய மணல். இரும்பொழில்
பெரிய
சோலை குன்றம் - திருப்பரங்குன்றம். 53 ஆம் அடியின் இறுதிச்சீர்
அழிந் தொழிந்தது. அது சூள் என்னும் பொருளுடையது போலும்.
துனியல் - வருந்தாதே. மலருண்கண்: அன்மொழித் தொகை
விளியேற்று நின்றது. சொல்வேறு என்றது நின்சொல் அதற்குரிய
உண்மைத்தன்மையின் வேறுபட்டது என்றவாறு. பொருந்தாச் |
|
|
|