பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்125

சொல் என்க. மலிர்தல் - பயிலுதல். சீப்பினது எனற்பாலது சீப் பின்னது
என விரித்தல் விகாரமெய்தி நின்றது. சீத்தலான் உண்டானது என்க.
சீத்தல் - வீசுதல்; நனிதுனியல் என மாறுக, சூள்நில் எனக் கூட்டுக.

(பரிமே.) மேல் தலைமகள் வையை மணலையும் பரங்குன்றத்தையும்
சூளுற்றான் குறிப்பு நோக்கி, நீ நின் சூளை விடு என.

56 - 58: என்பாணி . . . . . . . . ஒரு பெண் இவள்

      (இ - ள்.) எலாஅ சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ மகாஅன் -
இவ்வாறு நிகழ்ந்த தலைவன் தலைவி உரையாடலைக் கேட்டுநின்ற தோழி
தலைவனை நோக்கி ஏடா சான்றோர் ஈன்ற மிகத் தகுதியில்லாத மகனே
!, என் பாணி நில்நில் - யான் நினக்கு ஒன்று கூறுவேன் அது கூறி
முடியுந்துணையும் நில்லு நில்லு, இவள் ஈன்றாட்கு ஒரு பெண் -
இத் தலைவி இவளை ஈன்றாட்கு ஒரே பெண்ணாக உள்ளவள் இதனை
மனத்துக்கொள்ளுக என்றாள்:

      (வி - ம்.) எலா - ஏடா. தகாஅத் தகாஅ: ஒருபொருட்
பன்மொழி. மிகவும் தகுதியில்லாத என்க. சான்றாளர் ஈன்ற மகன்
என்பது குறிப்புமொழி. சாலாதார் ஈன்ற மகனே என்றவாறு. மகன்
என்பது இடைநின்ற குறில் நெடிலாகி அளபெடுத்து இசைநிறைத்து
மகாஅன் என நின்றது; அது விளியேற்று நின்றது.

      'ஈன்றாட்கு இவள் ஒருபெண்' என்றது. நீ இவ்வாறு பொய்ச்
சூளுறுதல் காரணமாக நினக்கு ஏதம் வருமிடத்து இவளும்
இறந்துபடுவாள்; இறப்பளேல் இவளன்றி மகவேறு இல்லாத இவள்
பெற்றோரும் இறந்துபடுதல் ஒருதலை ஆதலான் இவ் வுண்மையை
மனத்துட் கொண்டு நீ ஒழுகுதல் வேண்டும் என்றித்துணையும் குறிப்பான்
உணர்த்தி நின்றது.

      பாணி - காலம். நில்நில் என்றது, பொறுமையுடன் நின்று என்
கூற்றை உன்னிப்பாய்க் கேள் என்பதுபட நின்றது.

      இங்ஙனம் கூறித் தோழி மேலும் தலைவனை நோக்கிக் கூறுகின்றாள்.

      (பரிமே.) என, நினக்கு இச் சூளான் ஏதம்வரின் இவள்
இறந்துபடும் என்பது கூறிப் பின்னும், அவன் கூற்றைக்கொண்டு கூறுகின்றாள்.

59 - 64: இருள் . . . . . .. . அன்பளிதோ

      (இ - ள்.) இருள் மை உண் ஈர் கண் இலங்கு இழை - இருண்ட
மையுண்ட குளிர்ந்த கண்களையும் விளங்குகின்ற
அணிகலன்களையுமுடைய இவள், ஈன்றாட்கு அரியளோ ஆவது
அறிந்திலேன் - இவளைப் பெற்ற தாய்க்கு ஒரே பெண்ணாம்.