நின்னை அருள் இல் அணங்கான்
மெய்வேல் தின்னும் - அங்ஙனம்
பொய்ச்சூண் மொழியும் நின்னை அப் பெருமானைச் சார்ந்த அருள்
இல்லாத தெய்வங்களுடனே அவனுடைய மெய்ம்மைத் தன்மையுடைய
வேற்படையும் பெரிதும் வருத்தாநிற்கும், அறவர் அடி தொடினும் - நீ
சூண் மொழிவதாயின் பார்ப்பார் அடியைத் தொட்டு மொழியினும்
மொழிக, விறல் வெய்யோன் ஊர்மயில் வேல் நிழல் நோக்கி அவை
சூளேல் - வெற்றியையே விரும்பும் முருகப் பெருமான் ஊர்ந்து
செல்லுதற்குரிய மயிலும் அவன் ஏந்தும் வேற்படையின் ஒளியும் ஆகிய
இவற்றை நோக்கிச் சூள்மொழியாதேகொள், குறவன் மகள் ஆணை கூறு
ஏலா கூறேல் - மேலும் அப் பெருமானுடைய கிழத்தியாகிய குறவன்மகள்
வள்ளியின் மேலும் ஆணை கூறத் துணிகின்ற ஏடா அதனையும்
கூறாதேகொள், ஐய சூளின் - ஐயனே நீ இனிச் சூள் கூறுவாயாயின் நீ
முன் கூறியபடி, அடிதொடு குன்றொடு வையைக்குத் தக்கசீர் மணல்
சூள் கூறல் - சான்றோரானே வணங்கப்படும் திருப்பரங்குன்றத்தின்
மேலும் வையையாற்றிற்குத் தகுந்த புகழுடைய மணலின்மேலும் சூள்
மொழியாதே கொள் என்றாள்;
(வி - ம்.) என்னை என்றது - தலைவிக்குந் தனக்கும்
வேற்றுமை
கருதாமற் கூறியபடியாம். தலைவிக்கு அருள் செய்வதாக என்பது கருத்து.
அருளில் அணங்கு - அருளில்லாத தீண்டிவருத்தும் தெய்வம்.
அணங்கான் என்புழி ஆன் உருபு ஓடு உருபின் பொருட்டு. முருகனுக்கு
வேல் ஞான சத்தியாகலின் மெய்வேல் என்றாள். மிகுதியும் வருத்தும்
என்பது தோன்றத் தின்னும் என்றாள், தின்னும் - வருத்தும். தின்பது
போன்று வருத்தும் என்றபடியாம். ஆசிரியர் திருவள்ளுவனாரும்,
"கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காண லுற்று"
(குறள் - 1244.)
என்று ஓதியமை உணர்க.
விறல் வெய்யோன்: முருகன்; வெற்றியையே விரும்புபவன்
என்க. ஊர்மயில்: வினைத் தொகை. நிழல் - ஒளி. நிழல்வேல் என
மாறிக் கூறினும் பொருந்தும். அறவர் - பார்ப்பார். அடிதொடினும்
என்புழி உம்மை எதிர்மறை. குறவன் மகள் - வள்ளியம்மையார். கூறு
ஏலா எனக் கண்ணழிவுசெய்க. ஐய: விளி. அடிதொடு குன்று -
வணங்கப்படும் குன்று; ஆவது திருப்பரங்குன்று.
இத்துணையும் கூறித் தோழி தலைவனைச் சூள் விலக்க
மேலே
தலைவன் கூறுகின்றான்.
72 - 77: யார் . . . .. . . .. . . .நவின்றதை
(இ - ள்.) நேரிழாய் - நேரிழையே, யார் பிரிய
யார் வர யார்
வினவ செப்பு - யார் பிரிவது யார் வருவது யார் |
|
|
|