பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்131

கற்புடைத் தலைவியர் அத் திருப்பரங்குன்றை வழிபாடு செய்யு
மியல்பினைக் கூறுகின்றார் என்றவாறு.)

90 - 102: வளிபொரு . . . . . . . . தொடுநர்

      (இ-ள்.) வளிபொரு சேண் சிமைய வரை அகத்தால் தளி பெருகும்
- காற்றாலே மோதப்படும் உயரிய சிகரங்களையுடைய மலையின்கண்ணே
பெய்த மழைநீர் பெருகுதலானே தழைத்த, தண்சினைய பொழில் -
குளிர்ந்த கிளைகளையுடைய பூம்பொழில்கள், கொளக் குறையா மலர ?
பூக்கள் பறிக்கத் தொலையாவாகும்படி மலராநிற்பவும், குளிர் பொய்கை
அளறு நிறைய - குளிர்ந்த குளங்கள் நீராலே நிறையவும் சிறப்புற்ற,
மருதம் - மருதநிலத்தினூடே, கிடக்கும் நளி மணல் ஙெமர்ந்த - செறிந்த
மணல்பரந்த, நனிமலர்ப் பெருவழி - மிக்க மலரினையுடையதாய்த்
திருப்பரங்குன்றத்திற்கும் மதுரைக்கும் இடையே உள்ள பெரிய
வழியின்கண்ணே, சீறடியவர் - சிறந்த இறையன்புடையோர், சாறு கொள
எழுந்து - அக் குன்றத்தின்கண் உறையும் முருகவேளுக்கு விழாச்செய்ய
எழுந்து, வேறுபடு சாந்தமும் - நிறத்தானும் மணத்தானும் ஒன்றற்கொன்று
மாறுபடுகின்ற பலவேறு சாந்தங்களும், வீறு படு புகையும் -
பெருமையுடைய புகைப்பொருள்களும், ஆறு செல் வளியின் அவியா
விளக்கமும் - இயங்குகின்ற காற்றாலே அவியாத விளக்கிற்கு
வேண்டுவனவும், நாறுகமழ் வீயும் - மணங்கமழா நின்ற மலர்களும்,
இசை கூறு முழவமும் - இசையை எடுத்துக் காட்டும் முழவும், மணியும்
கயிறும் மயிலும் குடாரியும் பிணிமுகம் உளப்படப் பிறவும் ஏந்தி -
மணியும் கயிறும் மயிலும் கோடரியும் பிணிமுகம் என்னும் யானை
ஊர்தியும் ஆகிய இவற்றையும் இன்னோரன்ன முருகவேளுக்கு உவந்த
பிற பொருள்களையும் ஏந்திக்கொண்டு, அருவரை சேராத் தொடுநர் -
அரிய திருப்பரங்குன்றத்தினைச் சேர்ந்து முருகப் பெருமானது
திருவடிகளைத் தொழுபவர்:

      (வி-ம்.) வளி - காற்று. சிமை - சிகரம். யூளி - மழை. சினைய -
கிளைகளையுடைய. கொள - பறிக்க. அளறு: ஆகுபெயர். மருதத்திலே
கிடக்கும் பெருவழி. மணம் ஞெமர்ந்த பெருவழி எனத் தனித்தனி
கூட்டுக. ஞெமர்ந்த - பரந்த. பெருவழி - பெரியசாலை. சீறடியவர் -
சிறந்த கடவுளன்புடையோர். சாறு - விழா. சாந்தம் - சந்தனக் குழம்பு,
குங்குமக்குழம்பு முதலியன. வீறு - வேறொன்றற்கில்லாத சிறப்பு. புகை:
ஆகுபெயர்; அகில் முதலியன. ஆறு செல்வளி - இயங்கும் காற்று.
அவியா விளக்கம் - நந்தாவிளக்கு. நாறுகமழ் - மணங்கமழ்கின்ற. முழவம்
முதலியன முருகவேட்குரிய பொருள்கள் - மயில் குடாரி பிணிமுகம்
முதலிய பொன்னாற் செய்யப்பட்டவைகள். சேரா - சேர்ந்து. தொடுநர்
- வழிபாடு செய்யும் மகளிர் என்க.

(பரிமே.) 100. கயிறு - பாசம்.