பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்132

103 - 111: கனவில் . . . . . . . . கம்பலை

      (இ - ள்.) கனவின் கைதொட்டது பிழையாகாது - கனவின்கண்
யாம் எம் காதலரைக் கைதொட்டது பொய்யாகாமல், நனவின் சேப்ப-
நனவின்கண் எய்தும்படி, நின் நளி புனல் வையை வருபுனல்
அணிகென - நினக்குரிய செறிந்த நீரையுடைய வையையாறு புதுநீரை
அணிவதாக என்று, வரங்கொள்வோரும் - வரம் வேண்டுவோரும்,
வயிறு கரு உறுகெனக் கடம்படுவோரும் - எம் வயிறு கருப்பம்
எய்துக எய்தின் இன்னின்ன பொருளை நினக்குத் தருவேம் எனக்
கடன் நேர்பவரும், செய்பொருள் வாய்க்க எனச் செவிசார்த்துவோரும்
- எங்கணவர் சென்றுள்ள வினைக்கண் செய்தற்குரிய பொருள் நிரம்ப
வாய்ப்பதாக என்று முருகப்பெருமான் திருச்செவியின்கட் சேரக்கூறி
வழிபடுவோரும், ஐ அமர் அடுகென அருச்சிப்போரும் - போர்மேற்
சென்றுள்ள எம்தலைவர் அப் போரின்கட் பகைவரைக் கொன்று
வாகைசூடுக என்றுவேண்டி அருச்சனை செய்வோரும் ஆகி,
பாடுவார் பாணிச் சீரும் -முருகப்பெருமானை வாழ்த்திப்
பாடுபவருடையவும் பாடுவார் பாட்டிற்கிடும் பாணியாகிய
தாளத்தினுடையவும், அரங்கம் ஆடுவார் தாளமும் -
கூத்தாட்டரங்கத்தின்கண் ஆடுவாருடைய தாளத்தினுடையவும்
ஆகிய ஒலியும், மஞ்சாடு மலை முழக்கும் - முகில் தவழும்
அம் மலையின்கண் எழும் எதிரொலியும் ஆகிய, துஞ்சாக் கம்பலை -
கெடாத ஆரவாரத்தின் கண்ணே;

      (வி - ம்.) கனவின்கண் கணவன் கைபிடித்து வையையின்கண்
நீராடியதாகக் கண்டது நனவின்கண் நிகழும்படி வையையின்கண் புதுநீர்
வந்து அணிக என்க. கடம்படுதல் - இறைவனுக்குப் பொருள்களை
நேர்ந்து கோடல். ஐ - தலைவன். மஞ்சு - முகில். துஞ்சா - கெடாத.
கம்பலை - ஆரவாரம். ஐஅமர் - வியத்தகு போர் எனினுமாம்.

      (பரிமே.) 109. பாடுவாரது பாணியாகிய தாளமும்.

      111. இக் கெடாத கம்பலைக் கண்ணே: ஏழாவது வினைசெய்
இடத்தின்கண் வந்தது.

112 - 119: பைஞ்சுனை . . . . . . . . மார்பணி கலவி

      (இ- ள்.) பைஞ்சுனைப் பாய் எழுபாவையர் - பசிய
சுனையின்கண்ணே பாய்ந்து நீராடி எழாநின்ற பாவையராகிய, ஆயிதழ்
உண்கண் அலர்முகத் தாமரை - தம் அழகிய இமையாகிய
இதழ்களையுடைய மையுண்ட கண்ணாகிய தாமரைமலரும் முகமாகிய
தாமரைமலரும், தாள் தாமரை - தம் தாள்களாகிய தாமரைமலரும்,
தோள் தமனியக் கயமலர் தம் கைப் பதுமம் - தமது தோளாகிய
பொன்குளத்திலே மலர்ந்த தம் கையாகிய தாமரைமலரும், கொங்கைக்
கயமுகை - தம் கொங்கைகளாகிய