பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்148

வண்டுகளாக மாறி, நரம்பு உளர்நரும் - யாழ் நரம்பு இசைக்கு மாறு
இசை யெழுப்புவோரும், சிகை மயிலாய் தொகை விரித்து ஆடுநரும் -
உச்சிச் சூட்டினையுடைய மயில்களாய் மாறித் தம் தோகையை விரித்து
ஆடுவாரும், கோகுலமாய்க் கூவுநரும் - குயில்களாக மாறிக்
கூவாநிற்போரும், ஆகுலம் ஆகுநரும் - துன்பங்களை நுகர்வாரும்
ஆகாநிற்ப;

      (வி - ம்.) வாள்: ஆகுபெயர்: வாட்டழும்பென்க. மொய்ம்பு -
வலிமை. வரை - உத்தம இலக்கணமாகிய கோடுகளுமாம். அகலத்தவன்
- ஈண்டு முருகவேள். வானவன் - ஈண்டு இந்திரன். எழிலால் மலரையொத்த
உண்கண் என்க. கடிசுனை - மணமுடைய சுனை. அறை
- பாறைக்கல். அருஞ்சுனை - வேறிடத்தே காண்டற்கரிய சுனை என்க,
சுனையான் - சுனையின்கண்: வேற்றுமைமயக்கம். நரம்புபோல உளர்நரும்
என்க. சிகை - உச்சிச்சூட்டு: கொண்டை. தோகை: முதல் குறுகி, தொகை
என நின்றது. கோகுலம் - குயில். ஆகுலம் - துன்பம்.

      (பரிமே.) 66. ஆகுலமாகுநருமாக.

67 - 69: குறிஞ்சி..........................குன்று

      (இ - ள்.) தண் பரங்குன்று - இத் தண்ணிய திருப்பரங்குன்று,
குறிஞ்சிக்குன்றவர் மறம் கெழு வள்ளி தமர் - குறிஞ்சி நிலத்து
மக்களாகிய குறவர் பெற்ற தறுகண்மை பொருந்திய கொடிச்சியராகிய
வள்ளியின் தோழிமார். வித்தகத் தும்பை விளைத்தலால் -
மேற்கூறியவாறு திருந்திய போரினை விளைத்து வாகை சூடுதலானே,
வென வேலாற்கு ஒத்தன்று - வெற்றி வேலையுடைய முருகவேளுக்குப்
பெரிதும் இயைவதாயிற்று.

      (வி - ம்.) குறிஞ்சி - மலையும் மலைசார்ந்த இடமும். குன்றவர்
- குறவர். மறம் - தறுகண்மை. வள்ளிதமர் - வள்ளியின் தோழியர்.
வித்தகம் - திருத்தம். தும்பை; போர் விளைத்து வென்றதனால் என்க.

      (பரிமே.) இவ்வாறு அவனைப் படர்க்கையாக்கி இவை கூறிப்
பின்னும் எதிர்முகமாக்கி வாழ்த்துகின்றார்.

70 - 78: கடுஞ்சூர்....................................படாகை நின்றன்று

      (இ - ள்.) கடுஞ்சூர் மாமுதல் தடிந்து அறுத்தவேல்
அடும்போராள - கடிய சூரபதுமனாகிய மாமரத்தினது வேரை வெட்டி
அறுத்த வேற்படையினையுடைய போர்த்தொழிலை மேற்கொள்ளும்
பெருமானே, நின் குன்றின்மிசை - நின்னுடைய
திருப்பரங்குன்றத்தின்கண், ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்
- கூத்துத்தொழில் பயின்றோரை அக் கூத்துத்