"ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியையும்
கந்து மறமும் கறங்குளைமா - முந்துற
மேல்கொண் டவைசெலீஇ வென்வேலான் மேம்பட்டான்
வேல்கொண்ட கண்ணாளை மீட்டு"
(புற.வெ. 355)
இது குதிரை வென்றி.
"ஒலிமணித் திண்டேர் உடையாரை வெல்லும்
கலிமணித் திண்டேராற் காளை - கலிமாப்
பலவுடன் பூட்டிப் படர்சிறந் தைந்து
செலவோடு மண்டிலம் சென்று"
(புற. வெ. 356)
இது தேர்வென்றி.
"பாலை படுமலை பண்ணி அதன்கூட்டம்
கோலஞ்செய் சீறியாழ் கொண்டபின் - வேலைச்
சுவையெலாம் தோன்ற எழீஇயினாள் சூழ்ந்த
அவையெலாம் ஆக்கி அணங்கு"
(புற. வெ. 357)
இது யாழ் வென்றி.
ஓர்சொல் - ஒப்பற்ற புகழ். புகழ்க்கு அறிகுறியைப்
புகழாகி
என்றார். படாகை - கொடி - வென்றிக் கொடி. நின்றன்று - நின்றது
கல்விக்கு வென்றிக் கொடியுயர்த்தும் வழக்கத்தை.
"பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
உறழ்குறித் தெடுத்த உருகெழு தொடியும்"
(169 - 171)
எனவரும் பட்டினப் பாலையானும்,
"நன்பல பல்வேறு குழுக்கொடி"
(372 - 3.)
எனவரும் மதுரைக்காஞ்சி அடிக்கு நச்சினார்க்கினியர் கூறும் நல்லுரை
யானும் உணர்க.
(பரிமே.) 74. வல்லாரை - வல்லுப்போர் வல்லாரை.
75. இக் கல்வி வென்றிகளான் ஒப்பில்லாத புகழ்பரப்ப.
79 - 85: மேஎ வெஃகினவை.......................பொலிந்தே
(இ - ள்.) மேஎ எஃகினவை - பெருமானே! நீ நினக்குப்
பொருந்தியதொரு வேற்படையினையுடையை, வென்று உயர்த்த
கொடிவிறல் சான்றவை - நின் பகைவரை வென்று அவ்வெற்றிக்கு
அறிகுறியாயதொரு கோழிக்கொடியாலே வெற்றிப்பாடும்
அமையாநின்றனை, கற்பு இணை நெறி - கற்பொழுக்கம் பொருந்திய
நெறியினையுடைய நின் தேவியரினுடைய, ஊடு அற்பு இணை கிழமை
- ஊடுதலாகிய அன்பு பொருந்திய |
|
|
|