உரிமையினை,
நயத்தகு மரபின் வியத்தகு குமர - நயத்தற்கேற்ற
பண்பினையுடைய வியத்தற்குரிய அழகனே!, யாம் நினை -
அடியேங்களாகிய யாங்கள் நின்னை, நயத்தலின் சிறந்த எம் அடியுறை
- அன்பினாலே சிறந்த எம்முடைய நினது திருவடி நீழலிலே உறையும்
உறைவு, நாள் தொறும் பொலிந்து பயத்தலின் சிறக்க - நாள்தோறும்
பொலிவு பெற்றுப் பயன் தருதலோடே சிறப்பதாக என்று, தலை தாழ்த்து
வாழ்த்தினேம் பரவுதும் - நின் திருவடிகளிலே எமது தலையுறும்படி
வீழ்ந்து வணங்கி வாழ்த்தி வேண்டிக் கொள்ளாநின்றேம்.
(வி - ம்.) மேஎ-பொருந்திய எஃகு-வேல். எஃகினவை.
சான்றவை
என்பன ஐயீற்றுமுன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்றுக்கள் ஆதல்
முன்னும் கூறினாம். கொடி - கோழிக்கொடி. ஊடு அற்பு இணை கிழமை
எனக் கண்ணழித்துக் கொள்க. ஊடுகின்ற அன்பு பொருந்திய உரிமை
என்க. அற்பு - அன்பு. கிழமை - உரிமை. தலை தாழ்த்து என மாறுக;
வணங்கி என்றவாறு. வாழ்த்தினேம்: முற்றெச்சம்: வாழ்த்தி என்க.
நின்னை நயத்தலாலே சிறந்த எம்முடைய என்க. நயத்தல் - அன்பு
செலுத்துதல். எம் அடியுறை - யாங்கள் உறையும் எமது உறைவு
என்றவாறு. எனவே நினது திருவடிக்கண் யாங்கள் கொண்டுள்ள
விருப்பம் என்றவாறாயிற்று. நினது திருவடிக்கண் எமது விருப்பம்
நாடோறும் பொலிந்து சிறக்கும்படி நீ அருள்பாலிக்க வேண்டும் என்று
வேண்டியவாறு. அவனருளாலே அவனடி வணங்குதல் வேண்டுதலின்
இவ்வாறு வேண்டினர் என்க.
இவ்வாறே ஐந்தாம் பாட்டினும்,
"...............................யாம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்"
என்று வேண்டுகின்ற அருமையை இதனோடு ஒப்புக் காண்க.
(பரிமே.) என்றென்பது அவாய் நிலையான் வந்தது.
|
|
|
|