பத்தாம் பாடல்
_____
வையை
பொருட் சுருக்கம்
இப்பாடல் தலைவன் பிரிந்தமையானே ஆற்றாது வருந்திய
தலைவியின் நிலைகண்டு வருந்திய தோழி தலைவன்பால் பாணனைத்
தூதுவிட்டாளாக, அப் பாணன் தலைவனைப் பாசறைக்கண் சென்றுகண்டு
கார்ப்பருவ வருகையும், அதனால் மதுரையின்கண் வையையாற்றில் புதுநீர்
வந்தமையும், ஆங்கு நிகழ்ந்த நீரணிவிழவும் பிற செய்திகளும் கூறுவான்
கூற்றாக அமைக்கப்பட்டுளது.
1 - 8: பெருமானே! மலையிடத்தே மாலைப் பொழுதிலே
பெய்த
பெருமழையாலே காலைப் பொழுதிலே வையையாறு வெள்ளத்துடன்
கடலோடு கலக்கும் பொருட்டு மலர்ப்போர்வையையும் பருமணலையும்
மேலே மூடிக்கொண்டு உலகிற் பசிமுதலிய துன்பங்கள் அகன்றொழியவும்
வண்டுகள் பாடவும் கரை காவலரை அழைக்கின்ற பறைகள் முழங்கவும்
போந்தது.
9 - 18: அப் புனலிலே ஆடும் பொருட்டு யாவரும்
புறப்பட்டனர்; மகளிர் தம் மேகலை அணியை இறுகிறுகப் புனைந்தனர்;
நீர் வீசும் துருத்திகளையும், சந்தனத்தையும் எடுத்துக் கொண்டு
குதிரையின் மீதும், எருதுபூண்ட வண்டியின் மீதும், கோவேறு கழுதையின்
மீதும், குதிரை பூண்ட வண்டியின்மீதும், சிவிகையின்மீதும் ஏறினர்.
19 - 25: முகைபோன்ற பருவத்தினரும், புதுமலர் போன்ற
பருவத்தினருமாகிய இளமகளிரும், நரைவிரவிய கூந்தலுடையோரும்,
முழுநரையாகிய கூந்தலுடையோரும் ஆகிய முதுமகளிரும், கற்புடைய
மகளிரும், பரத்தையரும், இவர்தம் தோழியரும், சிலதியரும் மெல்லநடந்து
ஆற்றின் கரையைச் சேர்ந்தனர். இவர்கள் நடை தாளவிதியாலே
கூட்டப்பட்ட பல இசைக்கருவிகளின் மென்னடை போன்றிருந்தது.
26 - 40: இங்ஙனம் சேர்ந்த மகளிரிற் சிலர்
நீரின்
அழகைக்கண்டு நின்றனர்; சிலர் நீரணிமாடத்தில் ஏறிச் |
|
|
|