45 நில்லா தொருமுறை கொய்பு கூடி
ஒருங்குருண்டு பிளந்து நெரிந்துருள்பு சிதறுபு
அளறுசொரிபு நிலஞ்சோரச்
சேரார் இன்னுயிர் செகுக்கும்
போரடு குரிசில்நீ ஏந்திய படையே
50 ஒன்னார் உடங்குண்ணுங் கூற்றம் உடலே
பொன்னேர் பவிரழல் நுடக்கதன் நிறனே
நின்னது திகழொளி சிறப்பிருள் திருமணி
கண்ணே, புகழ்சால் தாமரை அலரிணைப் பிணைய
வாய்மை வயங்கிய வைகல் சிறந்த
55 நோன்மை நாடின் இருநிலம் யாவர்க்கும்
சாயல் நினது வானிறை என்னும்
நாவல் அந்தணர் அருமறைப் பொருளே
அவ்வும் பிறவும் ஒத்தனை உவ்வும்
எவ்வயி னோயும் நீயே
60 செவ்வாய் உவணத் துயர்கொடி யோயே
கேள்வியுட் கிளந்த ஆசான் உரையும்
படிநிலை வேள்வியுள் பற்றியாடு கொளலும்
புகழ்இயைந் திசைமறை உறுகனல் முறைமூட்டித்
திகழொளி ஒண்சுடர் வளப்பாடு கொளலும்
65 நின்உரு புடனஉண்டி
பிறர்உடம் படுவாரா
நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு
வாயடை அமிர்தநின் மனத்தகத் தடைத்தா
70 மூவாமரபும் ஓவா நோன்மையும்
சாவா மரபின் அமரர்க்காச் சென்றநின்
. . . . . . . . . . . . . மரபினோய் நின்னடி
தலையுற வணங்கினேம் பண்மாண் யாமும்
கலியில் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்
75 கடும்பொடுங் கடும்பொடும் பரவுதும்
கொடும்பா டறியற்க எம்மறி வெனவே.
கீரந்தையார் பாட்டு: 1 நன்னாகனார் இசை; 2 பண்ணுப் பாலையாழ்
(பாடம்.) 1.மருத்துவனல்லச் சுவனாரிசை.
2. பண்ணுக் குறிஞ்சி யாழ்.
|
|
|
|