உரை
1 - 4: தொன்முறை . . . . . . . . ஊழூழ்செல்ல
(இ -ள்.) தொல்முறை இயற்கையின் மதியொ . . .
. . மரபிற்று
ஆக - தொன்று தொட்டு ஒன்றற்கொன்று மாறி வரும் இயல்பினையுடைய
திங்கள் மண்டிலமும் ஞாயிற்று மண்டிலமும் அழிந்தொழிதலானே
அழகழிந்த இயல்பினையுடையதாய் மேலும், பசும்பொன் உலகமும்
மண்ணும் பாழ்பட - தன்னகத்திருந்த விண்ணுலகமும் நில உலகமும்
பாழ்பட்டொழியா நிற்ப இறுதியில், விசும்பில் ஊழி - அவ்வானமும்
இல்லையாய் ஒழிந்த ஊழிகள், ஊழ் ஊழ் செல்ல - முறையே முறையே
கழிந்தனவாக;
(வீ - ம்.) இப் பாடலின் முதல் நான்கு அடிகளில்
உலகத்தின்
ஒடுக்க முறை மிக அழகாகக் கூறப்படுகின்றது. இப் பகுதியில்
அழிந்துபோன சொற்றொடர் "ஞாயிறும் கெடுதலால் அழகிழந்து" என்னும்
பொருளுடையது என்பது பரிமேலழகர் உரையாலே உணரப்படும்.
தொல்முறை - தொன்றுதொட்டு நிகழும் முறைமை. உலகம்
ஒடுங்குங்கால் நிலம் நீரினுள் ஒடுங்க, நீர் தீயினுள் ஒடுங்க தீ காற்றினுள்
ஒடுங்க காற்று வானத்தில் ஒடுங்க, வானம் பிரகிருதியில் ஒடுங்க, இம்
முறையே ஊழிகள் பலவும் கழிய என்பார். 'விசும்பில் ஊழி ஊழ் ஊழ்
செல்ல' என்றார். ஊழ் - முறை.
உலகம் ஒடுங்குங்கால் திங்கள் மண்டிலமும் ஞாயிற்றுமண்டிலமும்
ஒளியிழந்து துகளாகி வானவெளியிலே சிதறிப்போக நிலமுதலிய
உலகங்கள் பின்னர்ச் சத்தி கெட்டு நொறுங்கித் துகள்பட்டொழியும் என
வரும் இக்கருத்து இக்காலத்துப் பூத நூலோரும்
ஏற்றுக்கொள்ளத்தக்கதாதல் உணர்க.
பசும் பொன்னுலகம் என்றது, துறக்கவுலகத்தினை.
5 - 19: கருவளர் . . . . . . . . பேணுதும் தொழுதும்
(இ - ள்.) இசையின் தோன்றி - அவ்வாறு ஊழிகள்
கழிந்த
பின்னர் மூலப்பிரகிருதியினின்றுந் தன் குணமாகிய ஒலியுடனே தோன்றி,
கருவளர் உருவு அறிவாரா வானத்து ஒன்றன் ஊழியும் - காற்று முதலிய
ஏனைப் பூதங்களின் நுண்ணணுக்கள் வளர்தற்கு இடமாகி யாதோர்
உருவமும் காணப்படாத வானத்தினது முதல் ஊழிக்காலமும், உந்து
வளி கிளர்ந்த ஊழ் ஊழ் ஊழியும் - அந்த வானத்தினின்றும்
பொருள்களை இயக்கும் காற்றுதீ தோன்றிக் கிளர்ந்து வீசிய
முறைமுறையாகிய இரண்டாம் பூதத்து ஊழியும், செந்தீச் சுடரிய ஊழியும்
- அந்தக் காற்றினின்று சிவந்த தீத்தோன்றிச்
ப. - 2 |