(பரிமே.) 93. நீர்க்கு ஒப்பனையாதல் கூடாமையிற் கூட்டுவார்
என்றார்.
93 - 4. இங்ஙனம் கூட்டுவார் ஊட்டுவார் ஆயது. தமக்கு
அப்புனல் செய்த உதவிக்குக் கைம்மாறு கருதி.
இனிப் புனல் பொருது மெலியாத மைந்தரைக் கூறுகின்றார்.
(63 ஆம் அடி தொடங்கி 99 ஆம் அடிவரையில் புனல் பொருது
மெலிந்த மகளிர் செயல் கூறப்பட்டது. இனிப் புனல் பொருது மெலியாத
மைந்தர் செயல் கூறப்படும் என்பது கருத்து.)
100 - 111: தண்டி.................................தீநீர்ப்புனல்
(இ - ள்.) தண்டி தண்டின் தாய்ச் செல்வோரும் -
(இனி மகளிர்
செயல் இவ்வாறாக நீராடற்கண் இளையாத மைந்தரிற் சிலர்,) மேலும்
நீராடலை விரும்பி வாழைத் தண்டினைத் தழுவிக்கொண்டு நீர்மேலே
தாவித்தாவிச் செல்லாநிற்பாரும், திரை நுரை கண்டல் தண் தாது
தூவாரும் - வேறு சிலர் அந் நீரின் அலை மேலும் நுரையின்மேலும்
தாழம்பூவின் குளிர்ந்த தாதினைத்தூவுவாரும், வெய்ய திமிலின் விரை
புனலோடு ஒய்வாரும் - சிலர் விசையாய் ஓடும் ஓடத்தின்கண் ஏறி
விரைந்து ஒழுகும் நீரோட்டத்தோடே ஒருசேரச் செலுத்துவாரும், புனல்
எதிர்மாறு ஆடி மெய்யது உழவின் - சிலர் விரைந்தொழுகும் நீரினது
எதிரே அதற்கு மாறாக எதிர் சென்று ஆடித் தம்முடலிலே தோன்றிய
இளைப்பினாலே, பைய விளையாடுவாரும் - அங்ஙனம் ஆடுதல்
தவிர்ந்து நீரோட்டத்தோடு ஒத்தியைந்து மெல்ல மெல்ல
விளையாடுவாரும் மென்பாவையர் செய்த பூஞ் சிற்றடிசில் இட்டு ஏற்பார்
- வேறு சிலர் மெல்லியலாராகிய மகளிர் தாமே இழைத்த அழகிய தமது
சிற்றில்லில் தாம் சமைத்த சிறு சோற்றை இடா நிற்ப அதனை
உண்ணுதற்குக் கரையிலேறி ஏற்பாரும், இடுவார் மறுப்பார் சிறுகு
இடையார் வேறு சிலர் தாம் கையேற்கும் பொழுது இடுவாராய்ப் பின்னர்
இடாது மறுப்பாராய்த் தம்மை அசதியாடாநின்ற சிறிய இடையினையுடைய
மகளிரது, பந்தும் கழங்கும் பல களவு கொண்டு ஓடி - பந்துகளையும்
கழங்குகளையும் இன்னோரன்ன பிற பலபொருள்களையும் அவரறியாதபடி
கவர்ந்து கொண்டு ஓடிச்சென்று நீர் அருகே நிற்ப அச் செயலை அறிந்த
மகளிர் அவரைத் தொடர்ந்து வாங்கச் சென்றுழி, அந்தண் கரைநின்று
பாய்வார் - அழகிய குளிர்ந்த அக் கரையினின்றும் அம்மகளிர் கைக்கு
அகப்படாமல் நீரினுள்ளே பாய்வாருமாய் இவ்வாறு ஆடுதலானே,
தீநீர்ப்புனல் - அவ் வையையாற்றினது இனிய நீர்மையுடைய புதுப்புனல்,
ஒளிறு இலங்கு எஃகோடுவாள் மைந்தர் மாறு உழக்கி - ஒளிவிடுதலானே
விளங்கா |
|
|
|