சுடர்வீசித் திகழ்ந்த மூன்றாம்
பூதத்து ஊழியும், பனியொடு தண்பெயல்
தலைஇய ஊழியும் - அத்தீயினின்றும் நீர்தோன்றிப் பனியும் குளிர்ந்த
மழையும் பெய்த நான்காம் பூதத்தின் ஊழியும், அவையிற்றுள் முறை
வெள்ளம் மூழ்கி ஆர் தருபு - அந் நான்கு பூத அணுக்களினூடே பின்பு
பண்டு முறையாக வெள்ளத்தே முழுகிக் கரைந்து ஒழிந்த நில அணுக்கள்
ஆண்டே கிடந்து, மீண்டும் பீடு உயர்பு ஈண்டி - மீளவும் தமது
சிறப்பாகிய ஆற்றல் மிக்குச் செறிந்து திரண்டு, அவற்றிற்கும் உள்ளீடாகிய
இருநிலத்து ஊழியும் - முற்கூறப்பட்ட நான்கு பூதங்களின் உள்ளீடாகிக்
கிடந்த ஐந்தாவதாகிய பெரிய நிலத்தூழியும் என்று கூறப்பட்ட
இவ்வூழிகள், நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் மைஇல்
கமலமும் வெள்ளமும் நுதலிய கழிப்பிய வழிமுறை - நெய்தல் முதலிய
பேரெண்களாற் குறிக்கப்பட்ட காலங்களின் ஈட்டங்களையும்
கடந்தபின்னர், கேழல் கோலமொடு திகழ்வரப் பெயரிய ஊழி - நீரினுள்
முழுகிக்கிடந்த நிலத்தை நீ பன்றியாகி மேலே கொணர்ந்து அதன்கண்
உயிர்கள் தோன்றி வாழத் தகுந்ததாகச் செய்த, காரணத்தால் நீ
மேற்கொண்ட அப்பன்றியினது அவதாரத்தோடு புணர்த்தப்பட்ட
பெயரோடு திகழாநின்ற 'வராக கற்பம்' என்னும் இந்த ஊழிக்காலம்,
ஒருவினை உணர்த்தலின் - நினது எண்ணிறந்த திருவிளையாடலில் ஒரு
திருவிளையாட்டை மட்டுமே உணர்த்தாநின்றது ஆகலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா - இவ்வொரு திருவிளையாட்டிலேயே
எண்ணிறந்த ஊழிகள் கழிந்துள எனின் இத்தகைய திருவிளையாடல்
எண்ணிறந்தன இயற்றிய நினது பழைமைக்குள்ள ஊழிகள் யாவரானும்
அறியப்படாதனவன்றோ?, ஆழி முதல்வ - சக்கரப்படையை உடைய
தலைவனே! , நின் பேணுதும் தொழுதும் - அத்தகைய நின்னைப்
போற்றி வணங்குவேம்;
(வி - ம்.) கரு - பூதங்கள் தோன்றுதற்குக் காரணமாகிய
பரமாணுக்கள். இசையில் - இசையினோடு என்க; இனி இசையாகிய தன்
மாத்திரையினின்றுந் தோன்றி எனினுமாம். இசையிற்றோன்றி உருவறிவாரா
வானத்து ஒன்றன் ஊழியும் என மாறுக. வானத்து: அத்துச் சாரியை
அல்வழிக்கண் வந்தது. வானமாகிய முதல் பூதத்தினது ஊழி என்க. காற்று
முதலிய ஏனைப் பூதங்களின் கருவளர்தற்கு இடமானதும் யாதோர்
உருவமும் அறியப்படாததுமாகிய வானத்தூழி என்க. உந்து வளி:
வினைத்தொகை. வளி - காற்று. ஒன்றன் ஊழியும் என்றமையால்,
இரண்டன் ஊழியும், மூன்றன் ஊழியும், நான்கன் ஊழியும், ஐந்தன்
ஊழியும் என அங்கங்கே ஒட்டுக. சுடரிய - சுடர்விட்டெரிந்த. நீர்
தோன்றிப் பனியும் மழையும் பெய்த என்க. தலைஇய - பெய்த.
அவையிற்று - அந் நான்கு பூதங்களினது. ஆர்தருபு - கிடந்து.
வானமுதலிய நான்கு பூதங்களின் அகத்தே கிடந்து நிலந்திரளுதலானே
அவற்றிற்கும் |
|
|
|