பக்கம் எண் :

பரிபாடல்- வையை207

   வாச நறுநெய் யாடி வான்றுகள்
20 மாசறக் கண்ணடி வயக்கி வண்ணமும்
   தேசு மொலியுந் திகழ நோக்கி
   வாச மணத்துவர் வாய்க்கொள் வோரும்
   இடுபுணர் வளையொடு தொடுதோள் வளையர்
   கட்டுவடக் கழலினர் மட்டு மாலையர்
25 ஓசனை கமழும் வாச மேனியர்
   மடமா மிசையோர்
   பிடிமே லன்னப் பெரும்பெடை யனையோர்
   கடுமா கடவுவோருங் களிறுமேல் கொள்வோரும்
   வடிமணி நெடுந்தேர் மாமுள் பாய்க்குநரும்
30 விரைபு விரைபு மிகைமிகை யீண்டி
   ஆடறலைத்தலை சிறப்பக் கூடல்
   உரைதர வந்தன்று வையைநீர் வையைக்
   கரைதர வந்தன்று காண்பவ ரீட்டம்
   நிவந்தது நீத்தங் கரைமேலா நீத்தம்
35 கவர்ந்தது போலும் காண்பவர் காதல்
   முன்றுறை நிறையணி நின்றவர் மொழிமொழி
   ஒன்றல பலபல வுடனெழுந் தன்றவை
   எல்லாந் தெரியக் கேட்குநா யாரவை
   கில்லா கேள்வி கேட்டன சிலசில
40 ஒத்த குழலி னொலியெழ முழவிமிழ்
   மத்தரி தடாரி தண்ணுமை மகுளி
   ஒத்தளந்து சீர்தூக்கி யொருவர் பிற்படார்
   நித்தந் திகழு நேரிறை முன்கையால்
   அத்தக வரிவைய ரளத்தல் காண்மின்
45 நாணாள்கொ றோழி நயனில் பரத்தையிற்
   றோணல முண்டு துறந்தா னெனவொருத்தி
   யாணர் மலிபுன னீத்தத் திரும்பிடி
   சேண வெரிநிற் சிறந்தானோ டேறினாள்
   நாணுக் குறைவில ணங்கைமற் றென்மரும்
50 கோட்டியுட் கொம்பர் குவிமுலை நோக்குவோன்
   ஓட்டை மனவ னுரமிலி யென்மரும்
   சொரிந்ததூஉஞ் சொற்றதூஉம் பற்றா ணிறந்திரிந்தாள்